132
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
கயல் பள்ளிக்குச் சென்றாள்.
கயலின் சகோதரி பள்ளிக்குச் சென்றாள்.
இவ்விரு தொடரையும் ஒரு தொடராகச் சொல்லும்போது 'கயலும் அவளின் சகோதரியும் பள்ளிக்குச் சென்றனர்' என வரும்.
கருமேகங்கள் வானில் திரண்டன. ஆயினும் மழை பெய்யவில்லை.
கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான். ஆனால் அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்.
முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில் அவனுக்கு உடல் நலமில்லை.
> அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. ஆகவே கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும்.
> செழியனும் அமுதனும் வேகமாக ஓடுகிறார்கள்.
> கயல்விழி பரிசுக்காகப் பாடுகிறாள்.
> தமிழரசன் நடக்கிறான். மேலும் ஓடுகிறான்.
> அமுதன் வேலை செய்த பிறகு உண்கிறான்.
> மழை பெய்ததால் மரங்கள் வளர்கின்றன.
மாடுகள், ஆடுகள் இரண்டும் மேய்கின்றன.
> செழியன் நன்றாகப் படித்தான். ஆகையால் அவன் தேர்வில் தேர்ச்சி பெற்றான்.
மழை பெய்தது. எனவே நான் குடை எடுத்துச் சென்றேன்.
> நீங்கள் தேநீர் அல்லது குளிர்பானம் குடிக்கின்றீர்களா?
பருவமழை பெய்தது. அதனால் ஏரி குளங்கள் நிரம்பின.
பூக்கள் அழகாகப் பூத்திருக்கின்றன. எனினும் பறிக்க மனமில்லை.
இரண்டு நேர்மறையான தொடர்களை இணைக்கும் பொழுதும். இரண்டு எதிர்மறையான தொடர்களை இணைக்கும் பொழுதும் இணைப்புச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(எ.கா)
நேர்மறைத் தொடர்
நான் நன்றாகப் படித்தேன். அதனால் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
எதிர்மறைத் தொடர்
நான் நன்றாகப் படிக்கவில்லை. அதனால் தேர்ச்சி பெறவில்லை.