பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

133







மேலே உள்ள தொடர்களில் இடம்பெற்றுள்ள ஆயினும், ஆனால், ஏனெனில், ஆகவே, ஆக, மேலும், ஆல், உம், அதனால், ஆகையால், எனவே, அல்லது, எனினும் இணைப்புச் சொற்கள் ஆகும். இவை போன்ற இணைப்புச் சொற்கள் நாம் பேசும் பேச்சில் இயல்பாகவே இடம்பெறுகின்றன. இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திப் பேசவும் எழுதவும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இணைச் சொற்கள்

தமிழ்மொழியில் சில சொற்கள் இணை இணையாக அமையும். இவற்றை இணைச் சொற்கள் என்பர். இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தினால் கருத்து தெளிவாகப் புரியும்.

5.2.3.1

எ.கா.

இணைச் சொற்களை மூவகையாகப் பிரிக்கலாம். அவையாவன,

1. நேர் இணைச்சொற்கள்

2. எதிர் இணைச்சொற்கள்

3. செறியிணைச்சொற்கள்

நேர் இணைச்சொற்கள்

ஒரே பொருளைத் தரும் இரு சொல் இணைந்து வருவது நேர் இணைச்சொல் எனப்படும்.

கவிதாவிற்குப் பிறந்துள்ள பெண் குழந்தை மூக்கும் முழியுமாக இருக்கிறாள். இந்தத் தொடரில் வந்துள்ள மூக்கும் முழியும் என்னும் இரண்டு நேர் இணைச் சொற்களும் அழகு என்னும் பொருளில் சொல்லப்பட்டுள்ளது.

1. அன்பும் அருளும்

2. பேரும் புகழும்

3. ஆற அமர

4. சீரும் சிறப்பும்

5. ஈடும் இணையும்

6. கள்ளம் கபடம்

7. உற்றார் உறவினர்

8. பாயும் படுக்கையும்

9. நோய் நொடி