தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
135
5.2.3.3
6. கிழக்கும் மேற்கும்
7. உச்சி முதல் உள்ளங்கால் வரை
8. ஏட்டிக்குப் போட்டி
9. குறுக்கும் நெடுக்கும்
10. மேடு பள்ளம்
11. கனவு நனவு
செறியிணைச்சொற்கள்
ஒரு சொல்லின் பண்பு அல்லது செயலை வலுப்படுத்தும் விதமாக ஒரே பொருள் உடைய இரு சொல் இணைந்து வருவது செறியிணைச்சொற்கள் எனப்படும். இவை இருவகைப்படும்.
1.
பண்பு செறியிணைச்சொற்கள்
2.
செயல் செறியிணைச்சொற்கள்
௦ பண்பு செறியிணைச்சொற்கள்
ஒரு சொல் பண்பு அடிப்படையில் இரு முறை வந்து அதன் பொருளை விளக்குவது பண்பு செறியிணைச்சொற்கள் ஆகும்.
எ.கா. செக்கச்செவேல் என்னும் சிவப்பு நிறம் இரண்டு முறை வந்து சிவப்பின் பண்பினைச் செறிவுபடுத்துகிறது.
1. வெள்ளைவெளேர்,
2. பச்சைப்பசேல்,
3. நட்டநடுவில்
செயல் செறியிணைச்சொற்கள்
வினைச்சொற்கள் சிலவற்றை அடுக்குத் தொடர்களாகக் கொண்டு கருத்தை அல்லது செயலை விளக்குவது செயல் செறியிணைச் சொற்கள் எனப்படும்.
எ.கா. அமுதன் தன் தந்தையிடம் அழுதழுது மிதிவண்டியை வாங்கினான். இதில் அழுதல் என்னும் வினைச்சொல் அழுதழுது என்னும் என்னும் அடுக்குத் தொடராக வந்து செயலைச்
செறிவுபடுத்துகிறது.