பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







மொழிநடைகள் பல வகைப்படும். அவை, தனித்தமிழ் நடை, அடுக்குமொழி நடை, எளிய நடை, இனிய நடை, வினா விடை நடை, மணிப்பிரவாள நடை, கலப்பு மொழி நடை எனப் பலவாகும்.

பலவகையான நடையமைப்புகள்

  • கொடுந்தமிழ் நடை - கொச்சை மொழியில் இருக்கும்.
  • செந்தமிழ் நடை - பிழையின்றி நல்ல தமிழில் இருக்கும். திரிசொல் நடை - கடினமான சொற்கள் இருக்கும். இயற்சொல் நடை - எளிய சொற்கள் இருக்கும்.

இலக்கிய நடை எதுகை, மோனை நயங்கள் இருக்கும்.

  • கலப்புமொழி நடை - பிறமொழிச் சொல், வடசொல் கலந்திருக்கும்.
  • தனித்தமிழ் நடை - தூய தமிழ்ச்சொற்கள் இருக்கும்.

அடுக்குமொழி நடை - சொற்கள் அடுக்கப்பட்டுச் சொல்லழகுடன் இருக்கும். * பழந்தமிழ் உரைநடை - உரையாசிரியர்களின் மிடுக்கான நடையிருக்கும்.

  • செம்மாப்பு மொழிநடை - கடின சந்திகளைக் கொண்டிருக்கும்.

தெளிவுநடை - கருத்துத் தெளிவுடன் இருக்கும்.

  • வினா-விடை நடை - வினாவும் விடையும் உரையில் விரவியிருக்கும்.

இனிய உரைநடை

பிழையில்லாச் சொற்கள், செறிவான தொடர்கள், கருத்துத் தொடர்ச்சி கொண்ட சிறு சிறு உரைப்பகுதிகள் என இவையாவும் இணைந்த ஓர் உரைநடையை நாம் எழுதவேண்டுமானால், அழகிய, இனிய மொழிநடையில் எழுதப்பட்டுள்ள நூல்களைப் படித்துணர வேண்டும்.

கருத்துத் தெளிவு

உரைநடை எளிய நடையில் இருப்பது, படிப்பவர்க்குக் கருத்தைத் தெளிவை எளிதில் புரியவைக்கும். தமிழில் நூல்கள் எழுத விரும்புவோர், பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுவது சிறப்பைச் சேர்க்கும்.

மேற்கோள்

உரைநடையில் மிகுதியாக மேற்கோள் பயன்படுத்துவது அறிவுக் குறைவைக் காட்டும். இக்காலத்தில் தேவையான இடங்களில் மட்டுமே மேற்கோள் அளவாகப் பயன்படுத்தப்படுகிறது. இனிய சொற்றொடரும் மரபும்

படிப்பவர்க்குச் சுவையூட்டும் வகையில் இனிய சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அவை அளவுக்குமீறி இருக்கக்கூடாது. மரபுத்தொடர்களின் பொருளறிந்து தேவையான இடங்களில் பயன்படுத்தி எழுதவேண்டும்.