தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
141
பழமொழிகள்
உரைப்பகுதியில் இன்றியமையாத இடங்களில் பழமொழிகள் இடம்பெறுவது சிறப்பைத் தரும். ஆனால், எழுதுபவருக்குப் பல பழமொழிகள் தெரிந்திருந்தாலும் அவை அனைத்தும் இடம்பெற வேண்டும் என்பது படிப்பவருக்குச் சலிப்பை ஏற்படுத்தும்.
அணிகள்
பொதுவாகச் செய்யுள்களில் அணிகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு. 'அணியில்லா கவிதை பணியில்லா வனிதை' என்பது, அணிக்கு அளிக்கப்படும் முதன்மையைக் கூறும். உரைநடையில் விளக்கத்திற்காகவும் சுருக்கத்திற்காகவும் அழகுக்காகவும் உவமை, உருவகம் முதலிய அணிகளை அமைத்து எழுதலாம்.
சந்திகள்
இருசொல்லுக்கிடையே அமைவதே சந்தி. தேவையான இடங்களில் பொருள் மயக்கம் ஏற்படாதவாறு சந்தி பிரித்தல் வேண்டும். 'அப்பாவைப் பார்த்தாள்' இத்தொடரில் ஒரு பெண் தன் தந்தையைப் பார்த்தாள் எனப் பொருள் தருகிறது. ஆனால், உண்மையில் 'அப் பாவைப் பார்த்தாள் என்பது, அந்தப் பாவை (பெண்) பார்த்தாள் எனப் பொருள் தருகிறது. ஆகையால் சரியான சந்தி பிரிப்பு எது என அறிந்துகொள்ள வேண்டும். 'நானூறு தந்தேன்' என்பது, நானூறு ரூபாய் தந்தேன் எனவும் நான் நூறு தந்தேன்' என்பது, நான் யாரோ ஒருவருக்கு நூறு ரூபாய் தந்து உதவினேன் என்னும் பொருளையும் தருகிறது. எனவே, பொருள் நோக்கி இடம்விட்டும் இடம்விடாமலும் எழுதவேண்டும்.
5.6.1 மொழி நடைக்குச் சில சான்றுகள்
"இயற்கையின் நோக்கம் என்ன? உலகை ஓம்ப வேண்டும் என்பதா? அல்லது அதை அழித்தல் வேண்டும் என்பதா? இயற்கை அன்னை ஒருபோதும் உலகை அழிக்க முனைந்து நில்லாள்". இது திரு.வி.க அவர்களின் வினா விடை நடை.
"தமிழ் உமது முரசாகட்டும் பண்பாடு உமது கவசம் ஆகட்டும். அறிவு உமது படைக்கலன் ஆகட்டும் அறநெறி உமது வழித்துணை ஆகட்டும் உறுதியுடன் செல்வீர் ஊக்கமுடன் பணிபுரிவீர்" இது அறிஞர் அண்ணாவின் உணர்ச்சி நடை.
5.7 மொழிச் செம்மை
பொருள் திரிபடையாமல் இலக்கண முறைக்கு ஏற்ப எழுதப்படுதலே மொழிச் செம்மை
எனப்படும்.
5.7.1 கருத்துகளைத் தெளிவாக முன்வைத்தல்
சொற்கள் அல்லது தொடர்கள் குற்றமற்றதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தான் சொல்ல வந்த கருத்துகளைப் பிறருக்கு எளிமையாகப் புரிய வைக்க முடியும்.