தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
143
4.
ஏவல் விடை
5.
வினா எதிர் வினாதல் விடை
6.
உற்றது உரைத்தல் விடை
7.
உறுவது கூறல் விடை
இனமொழி விடை
8.
௦ சுட்டு விடை
"காரைக்குடிக்கு வழி யாது?" என்று வினவினால் இது என்பது போலச் சுட்டிக் கூறும் விடை சுட்டுவிடை.
கிளைநூலகம் எங்குள்ளது? என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது எனக் கூறுவது
சுட்டுவிடை.
மறைவிடை (எதிர் மறுத்துக் கூறல் விடை)
"இதனைப் படி" என்று கூறிய போது படிக்க மாட்டேன் என்று எதிர் மறுத்து விடை கூறுவது மறை விடை எனப்படும்
செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு 'விளையாடவில்லை' எனக் கூறுவது மறைவிடை எனப்படும். இங்கு மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.
0 நேர்விடை (உடன்பட்டுக் கூறுதல்)
'இதைச் செய்வாயா?' என்று வினவியபோது 'செய்வேன்' என்பதுபோல் உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும்.
'செழியன் விளையாடினாயா?' என்னும் வினாவிற்கு 'விளையாடினேன்' எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.
ஏவல் விடை
விடை.
'இதைச் செய்வாயா?' என்று வினவியபோது 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது ஏவல்
வினவியவரையே ஏவுவதால் ஏவல் விடை எனப்படும்.
கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு 'நீயே பாடு'என்று விடை கூறுவது.
வினாஎதிர் வினாதல் விடை
'இதைச் செய்வாயா?' என்று வினவியபோது 'செய்யாமலிருப்பேனா?' என்று வினாவையே விடையாகக் கூறுவது வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.