பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







முகிலா தேர்வுக்குப் படித்தாயா? என்னும் வினாவிற்கு 'நான் படிக்காமல் இருப்பேனா' என விடையளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.

உற்றது உரைத்தல் விடை

"இதனைச் செய்வாயா?" என்று வினா கேட்கும் போது, உடம்பு வலித்தது என்று தனக்கு நடந்ததைக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

நீ ஓடினாயா? என்னும் வினாவிற்குக் 'கால் வலித்தது' எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது.

உறுவது கூறல் விடை

"இதைச் செய்வாயா?" என்று வினவியபோது 'கை வலிக்கும்' எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.

"நீ இதனைச் சாப்பிடுவாயா?" என்னும் வினாவிற்கு 'வயிறு வலிக்கும்' எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை உறுவது கூறல் விடை எனப்படும்.

இனமொழி விடை

"ஆடுவாயா?" என்று வினவிய போது "பாடுவேன்" என்று ஆடுவதற்கு று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது இனமொழிவிடை.

ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை

எனப்படும்.

5.9.2 வினா வகைகள்

மொழியின் வளர்ச்சி என்பது கேள்வி கேட்பதிலும் கூட இருக்கிறது. பல்வேறு சூழல்களில் கேள்விகள் கேட்கிறோம் இக்கேள்வி அல்லது வினா ஆறு வகைப்படும்.

1.

அறிவினா

2.

அறியாவினா

3.

ஐயவினா

4.

கொளல் வினா

5.

கொடை வினா

6.

ஏவல் வினா

0 அறிவினா

தனக்குத் தெரிந்த விடை பிறருக்குத் தெரியுமா? என்பதை அறியும் வகையில் கேட்கப்படும்

வினா அறிவினா எனப்படும்.