பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

145






எ.கா


"திருக்குறளை இயற்றியது யார்?"

என்று ஆசிரியர் மாணவரிடம் கேட்கிறார். இந்தக் கேள்விக்குப் பதில் ஆசிரியருக்குத் தெரியும். மாணவர்களுக்கு தெரிகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் வினா அறிவினா எனப்படும்.

• அறியா வினா

தனக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ள மற்றவரிடம் கேட்கப்படும் வினா அறியா வினா எனப்படும்.

எ.கா.

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு"

என்னும் குறளின் விளக்கம் என்ன என்று மாணவன் தெரிந்துகொள்வதற்காகக் கேட்கப்படும் வினா அறியா வினா எனப்படும். ஐய வினா

எ.கா.

ஆசிரியரிடம் கேட்டுத்

தனக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்கிக்கொள்ள கேட்கப்படும் வினா ஐய வினா எனப்படும்.

அட்சய பாத்திரத்தால் பசிப்பிணியைப் போக்கியது மணிமேகலையா? மாதவியா? என்று கேட்கப்படும் வினா ஐய வினா எனப்படும்.

கொளல் வினா

ஒரு பொருளை மற்றவரிடம் இருந்து வாங்கிக் கொள்ளும் வகையில் கேட்கப்படும் வினா கொளல் வினா எனப்படும்.

எ.கா.

ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் மாணவரால் கேட்கப்பட்ட வினா கொளல் வினா எனப்படும்.

கொடை வினா

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் விதமாகக் கேட்கப்பட்ட வினா கொடை வினா எனப்படும்.