பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

149







4. துணிகளை மடித்து வைப்பாயா என்னும் வினாவிற்கு, 'நீயே மடித்து வை.' என்று கூறுதல்.

5. நாள்தோறும் உடற்பயிற்சி செய்வாயா என்னும் வினாவிற்கு, 'செய்வேன்' என்று கூறுதல்.

எ) ஓரிரு தொடரில் விடை தருக.

1. ஏதேனும் ஓர் இணைப்புச்சொல்லைக் கொண்டு தொடர் உருவாக்குக.

பயன்படுத்தப்பட்டுள்ளதா?

2. பின்வரும் தொடரில் இணைப்புச்சொல் சரியாகப் இல்லையெனில் சரியான இணைப்புச்சொல்லைச் சேர்த்துத் தொடரைக் கூறுக.

ஆசிரியர் என்னை அழைக்கவில்லை. ஏனெனில், நான் அவரைப் பார்க்கச்

சென்றேன்.

3. இணைச்சொற்கள் எவ்வாறெல்லாம் வரும்? ஒவ்வொரு வகைக்கும் ஓர் எடுத்துக்காட்டு

தருக.

4. பின்வரும் தொடரில் இணைச்சொல் சரியாக உள்ளதா? இல்லையெனில், சரியான இணைச்சொல் கூறுக.

சாலையைக் கடக்கும்போது, இங்கும்அங்கும் பார்த்துச் செல்லவேண்டும்.

5. கதிரவன் என் வீட்டிற்கு வந்திருந்தான்.

கதிரவன் என் வீட்டிற்கு வந்து இருந்தான்

இவ்விரு தொடருக்கும் என்ன

வேறுபாடு? வேறுபடுத்தும் சொல் எது?

6. பின்வரும் உரைப்பகுதியைப் படித்து, அதில் எத்தகைய மொழிநடை பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுக.

"இயற்கையின் நோக்கம் என்ன? உலகை ஓம்ப வேண்டும் என்பதா? அல்லது அதை அழித்தல் வேண்டும் என்பதா? இயற்கை அன்னை ஒருபோதும் உலகை அழிக்க முனைந்து நில்லாள்".

7. திருக்குறளை இயற்றியது யார்? என்று ஆசிரியர் மாணவனிடம் கேட்பது எத்தகைய வினா?

8. "இந்தக் கையெழுத்து வளவனுடையதா? செழியனுடையதா?" என்று கேட்பது எத்தகைய வினா?

9. பின்வரும் தொடரில் எத்தகைய செறியிணைச் சொல் இடம்பெற்றுள்ளது? கண்டறிக.

கிளி கொஞ்சிக் கொஞ்சிப் பேசியது.

10. 'விடு' - இத்துணைவினையைக் கொண்டு மூன்று தொடர் உருவாக்குக.