6
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
அவன், அவள், அவர், அது, அவை, இவன், இவள், இவர், இது, இவை
இவற்றுள், 'இ' என்பது, பக்கத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டுவதற்கு வரும் எழுத்து. அதனால், 'இ' என்பது அண்மைச் சுட்டு என்ற அழைக்கப்படுகிறது.
இவன், இவள், இவர், இது, இவை
'அ' என்பது, தொலைவில் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டுவதற்கு வரும் எழுத்து. அதனால் 'அ' என்பது சேய்மைச் சுட்டு. (சேய்மை - தொலைவு)
அவன், அவள், அவர், அது, அவை
அந்த, இந்த, அங்கு, இங்கு என வருவன எல்லாம் சுட்டுத் திரிபுகள் எனப்படும். 'உ' என்ற எழுத்தும் சுட்டு எழுத்து. ஆனால், இது தற்காலப் பயன்பாட்டில் இல்லை.
அகச்சுட்டு
ஒருசொல்லின் அகத்தே (உள்ளே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
சான்று:
அவன், அவள், அவர், அது, அவை
இவன், இவள், இவர், இது, இவை
உது, உவன்.
அகச்சுட்டுச் சொற்களிலிருந்து சுட்டெழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது.
அ + வள்
+ வள்
அ + வன்
+ வன்
அ +து
இ + து
அ + வை
இ + வை
புறச்சுட்டு
ஒரு சொல்லின் புறத்தே (வெளியே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு ஆகும். சான்று:
அப்பையன், அவ்வீடு, அக்குளம்.
இப்பையன், இவ்வீடு, இக்குளம்
உப்பக்கம்.