பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






மேற்கண்ட


ஏதாவது செய்யமுடியுமா? (ஆவது)

இனிமேல் உண்மையை மறைத்துப் பயனில்லை (மேல்)

மாதந்தோறும் கழகக் கூட்டம் நடைபெறும் (தோறும்)

ஏணியிலிருந்து இறங்கினான் (இருந்து)

வீட்டைவிட்டு வரும்போது கையில் பணம் இல்லை (போது)

அடைப்புக்குறிக்குள்

கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களைத்

தனியே

படிக்காமல், அவை எச்சொல்லுடன் இணைந்துள்ளதோ அதனுடன் சேர்த்தே படிக்க வேண்டும்.

சொற்களைச் சரியான இடத்தில் எழுதுவதும், இணைத்து எழுதுவதும், இடம்விட்டு எழுதுவதும் எனப் பல முறைகள் நாம் சொல்ல நினைக்கும் கருத்தைப் பொருள் மாறாமல் சொல்ல உதவும்.

உதாரணமாக,

அப்பா வந்தார் என்று இப்போதுதான் தம்பி சொன்னான்.

என்று எழுதும்போது அப்பா வந்துவிட்டார் என்பது, இப்போதுதான் எனக்குத் தெரியும் என்ற கருத்து வெளிப்படுகிறது. இத்தொடரில் ஒரே ஒரு சொல்லை மட்டும் மாற்றும்போது பொருள் பெரிதும் மாறுபடும்.

இப்போதுதான் அப்பா வந்தார் என்று தம்பி சொன்னான்.

இதில் அப்பா இப்போதுதான் வந்தார் எனப் பொருள் மாறுபடும்.

மேலும்,

பொருளை மாற்றும் அமைப்பு முறைகள்

இப்பாடத்தில் மேற்கூறியவாறு தொடர்களை எந்த மயக்கமும் இன்றி எழுத உதவும் அமைப்புகள் பற்றியே நாம் கற்கப் போகிறோம்.

பொருளும் தொடர் அமைப்பும்

என

குமரன் தானே வேலைகளைச் செய்தான்

எழுதும்போது, குமரன் தனியாக எல்லா வேலைகளையும் செய்தான் என்ற பொருள்

வெளிப்படும்.

குமரன்தானே வேலைகளைச் செய்தான்

என எழுதும்போது குமரனா வேலைகளைச் செய்தான் என்ற வினாப் பொருள் வெளிப்படும்.

தொடரில் நிறுத்தக் குறியீடுகளைச் சேர்க்கும்போது, அவை பொருள் விளக்கத்தைச் சரியான முறையில் சொல்ல உதவும்.