தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
159
அல்லவா:
ஒரு தொடரில் வினைச்சொல் அல்லாத சொற்களுடன் இச்சொல்லை இணைத்து எழுத வேண்டும்.
நீயல்லவா இதைச் சொல்லியிருக்க வேண்டும்.
வினைச்சொல்லை அடுத்து எழுதும்போது தனித்து எழுத வேண்டும்.
அற்ற
நீ இதை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?
பெயர்ச்சொல்லோடு எழுதும்போது இணைத்து எழுத வேண்டும்.
சிந்தனையற்ற செயல்
மணமற்ற மலர்
அடை சேர்ந்து வரும் பெயர்ச்சொல்லாய் இருந்தால் பிரித்து எழுத வேண்டும்
ஆகிய
சுயசிந்தனை அற்ற மனிதர்
நறுமணம் அற்ற மலர்
சிறப்புப் பெயர் மற்றும் பொதுப் பெயர்களோடு வரும்பொது இணைத்து எழுத வேண்டும்
பறவைகளாகிய கிளி, மைனா
தொகுப்பாக நிறைய சொற்களுடன் வரும்போது தனித்து எழுத வேண்டும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகள்
அருகில்
'உ' எழுத்தோடு முடியும் சொற்களோடு வரும்போது இணைத்து எழுதுதல் வேண்டும்.
கதவருகில், கிணற்றருகே
மற்ற சொற்களோடு தனியாக எழுதலாம்.
அல்லது
சன்னல் அருகில்
வண்டி அருகில்
இச்சொல் எல்லா இடங்களிலும் தனித்தே எழுதப்படல் வேண்டும்.