பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

161






6.2.4 நிறுத்தக் குறியீடுகளின் தோற்றம்


அச்சுக் கலை இந்தியாவில் தோன்றிய பிறகு தமிழ்மொழியில் நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாடு மிகுந்தது. புத்தகங்கள் தமிழில் அச்சிடப்பட ஆரம்பித்த பின்னர், பல நிறுத்தக் குறிகள் தமிழில் கையாளப்பட்டன.

6.2.5 புள்ளிகள்

நிறுத்தக் குறியீடுகளில் புள்ளிகள் மிகவும் முக்கியம். வாசிக்கும்போது ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டவும், கூறும் செய்தியின் பொருளில் குழப்பம் வராமல் இருக்கவும், படிப்பவரின் கவனத்தைத் தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டுசெல்லவும் நிறுத்தக் குறிகள் பயன்படுகின்றன.

இவற்றில் புள்ளிகள் முதலிடம் பெறுகின்றன. அவை,

1. கால் புள்ளி

2. அரைப் புள்ளி

3. முக்காற் புள்ளி

4. முற்றுப் புள்ளி

5. முப்புள்ளி

இவற்றோடு இன்னும் சில குறியீடுகளும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

6. கேள்விக்குறி

7. உணர்ச்சிக்குறி

8. இரட்டை மேற்கோள் குறி

9. ஒற்றை மேற்கோள் குறி

10. தனி மேற்கோள் குறி

11. மேற்படிக்குறி

12. பிறை அடைப்புக் குறி

13. சதுர அடைப்புக்குறி

14. இணைப்புக்குறி

15. சாய்கோடு

ஆகியவை ஆகும். இவற்றின் பயன்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம்.