162
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
6.2.5.1 கால் புள்ளி: (உறுப்பிசைக் குறி)
இக்குறி இடப்படும் இடங்களில் ஒரு மாத்திரை அளவு நிறுத்தி வாசிக்க வேண்டும். இவை இடப்படும் இடங்கள் பல உள்ளன.
ஒரு பெயர்ச்சொல்லோடு பல வினைச் சொற்கள் வரும் இடங்களில் கால்புள்ளி இடல் வேண்டும்.
நான் இராமனை வீட்டில் சென்று பார்த்தேன், பேசினேன், வந்தேன்.
- அது போலவே பல பெயர்ச்சொற்கள் வரும் இடங்களிலும் கால்புள்ளி இடல் வேண்டும். கடைக்குச் சென்று மா, பலா, வாழை, கொய்யா ஆகிய பழங்கள் வாங்கினேன்.
ஒரு பெயர்ச்சொல்லை விவரித்துச் சொல்லும் பல தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி வரல் வேண்டும்.
அழகான, நறுமணமிக்க, பல இதழ்கள் கொண்ட தாமரை மலர்ந்தது.
தொடரில் ஒரே வினைச்சொல் இரண்டு முறை வரும்போது கால்புள்ளி இடல் வேண்டும்.
நீ வருவாய், வருவாய் எனக் காத்திருந்தேன்.
இரு தொடரை இணைக்கும் இணைப்புச் சொற்களை அடுத்தும் கால்புள்ளி இடல் வேண்டும்.
நேற்று மழை பெய்தது. ஆனால், குளம் நிறையவில்லை.
- சொல்லும் கருத்தில் உள்ள உணர்ச்சி வெளிப்படவும், அழுத்தம் ஏற்படவும் கால்புள்ளி இடல் வேண்டும்.
தெருவெங்கும் கொட்டிக் கிடந்தன, மலர்கள்
இல்லையா, அல்லவா போன்ற சொற்கள் வரும் தொடர்களில் கால்புள்ளி இடல் வேண்டும்.
நேற்று பலமாகக் காற்று வீசியது, இல்லையா?
வினாக்களில் அடுக்கி வரும் சொற்களுக்கு இடையிலும், விடையில் வரும் வினாச் சொல்லை அடுத்தும் கால்புள்ளி இடல் வேண்டும்.
இனிப்பா, காரமா என்ன வேண்டும்?
இதுவா, பேனா.
- ஏவல் வினைகள் வரும் தொடர்களில் கால்புள்ளி இடல் வேண்டும்.
அவனைத் தடுக்காதே, விடு.