பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

163






  • உணர்ச்சி வாக்கியங்களில் வேண்டும்.

ஐயோ, வலிக்கிறதே!


உணர்ச்சிச் சொல்லைத் தொடர்ந்து கால்புள்ளி இடல்

ஆமாம் என்ற சொல் தொடரில் வரும்போது கால்புள்ளி இடல் வேண்டும்.

ஆமாம், அவர் நேற்று வந்தார்.

ஒருவரை விளித்து எழுதும்போது, கால்புள்ளி இடல் வேண்டும்.

தம்பி, இங்கே வா

கடிதங்களில் விளிக்கும்போதும், முடிக்கும் சொல்லிலும் கால்புள்ளி இடல் வேண்டும்.

மதிப்பிற்குரிய ஐயா,

இப்படிக்கு,

  • முகவரியைப் படுக்கை வரிசையில் எழுதுகையில் கால்புள்ளி இடல் வேண்டும்.

கார்த்திகேயன், 12, மேற்கு வீதி, மதுரை.

> இதே முகவரியை ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதும்போது கால்புள்ளி இடக்கூடாது.

கார்த்திகேயன்

12, மேற்கு வீதி

மதுரை

பட்டங்களை எழுதும்போது கால்புள்ளி இடல் வேண்டும்.

எம்.ஏ, டி.லிட்

  • மாதம் தேதிக்குப் பின் ஆண்டு எழுதும்போது கால்புள்ளி இடல் வேண்டும்.

தேதி மாதம் ஆண்டு எழுதும்போது கால்புள்ளி இடக் கூடாது.

நவம்பர் 14, 1960

14 நவம்பர் 1960

6.2.5.2 அரைப்புள்ளி: (விளக்கிசைக் குறி)

கால் புள்ளியைவிட அதிக நேரம் இடைவெளிவிட்டு வாசிக்க வேண்டும். இரண்டு மாத்திரை அளவு இடைவெளி தரவேண்டும். இதுவும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.