பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







ஒரே கருத்தைப் பல முற்றுத் தொடர்களால் கூறும்போது அரைப்புள்ளி இடல் வேண்டும்.

தமிழ் இலக்கியங்கள் தொன்மையானவை; பொருள் நிறைந்தவை; அறக் கருத்துகளைக் கூறுபவை.

காரணம், விளைவு இரண்டையும் கூறும்போது அரைப்புள்ளி இடல் வேண்டும்.

மழை பெய்தது; குளம் நிறைந்தது.

  • இரு பொருளை ஒப்பிட்டுக் கூறும்போது அரைப்புள்ளி இடல் வேண்டும்.

நிலவு குளிர்ச்சியானது; சூரியன் வெப்பம் நிறைந்தது.

  • ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைக் கூறும்போது அரைப்புள்ளி இடல் வேண்டும். பரிசு பெற்றவர்கள் விமலா, கோயம்புத்தூர்; அம்பிகா.குமார், தேனி; கனிமொழி, கரூர்;

6.2.5.3 முக்கால் புள்ளி: (விளக்கிசைக் குறியீடு)

ஒரு தொடரில் வரும் செய்தியை விளக்க, தொடர்ந்து செய்திகள் எழுதப்படும்போது முக்கால் புள்ளி இடப்படும். அரைப் புள்ளிக்குமேல் கால் இடைவெளி தர இந்தக் குறியீடு இடப்படும். மூன்று மாத்திரை அளவு கால இடைவெளி தரவேண்டும்.

என்னவெனில், என்பது, என்றால் போன்ற சொற்களுக்குப் பதிலாகத் தொடரில் முக்கால் புள்ளி இடப்படும்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் சொன்ன செய்தி: உணவு அருமையாக இருந்தது.

வீடு: அம்மா, அப்பா, குழந்தைகள் இணைந்து வாழ்வது.

சிறு தலைப்பைத் தொடர்ந்து அதனை விரிவாகக் கூறும் செய்திகளின் இடையில் முக்கால் புள்ளி இடப்படும்.

அனைவருக்கும் இருக்க வேண்டிய பழக்கங்கள்: உதவி செய்தல், அன்பு காட்டுதல், இனிமையாகப் பேசுதல்.

உரையாடல் வடிவில் எழுதும்போது, கூறியதாவது என்ற சொல்லிற்குப் பதிலாக முக்கால் புள்ளி இடப்படல் வேண்டும்.

ஆசிரியர் : வீட்டுப்பாடம் செய்தாயா?

மாணவன் : இல்லை ஐயா.

ஆசிரியர்: ஏன் எழுதவில்லை?

மாணவன் : ஊருக்குச் சென்றுவிட்டேன் ஐயா! மன்னித்துக் கொள்ளுங்கள். நாளை எழுதி விடுகிறேன்.