தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
165
- பட்டியல்கள் எழுதும்போது தலைப்புகளை அடுத்து முக்கால் புள்ளி இடல் வேண்டும்.
பெயர்: குமரேசன்
தொழில்: எழுத்தாளர்
பிறந்த தேதி: 19.10.1985
6.2.5.4 முற்றுப்புள்ளி: (முடிப்பிசைக் குறி)
நிறுத்தக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவது முற்றுப்புள்ளி ஆகும். ஒரு தொடர் முடிவு பெற்றுவிட்டது. ஒரு கருத்து முடிந்து விட்டது என்று கூறுவது முற்றுப்புள்ளியின் பணி.
எனக்குப் பூக்கள் பிடிக்கும்.
- கட்டளை வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வரும்.
புத்தகத்தை எடுத்து வா.
- படுக்கை வரிசையில் எழுதப்படும் பட்டியலின் இறுதியில் முற்றுப்புள்ளி இடல் வேண்டும்.
பால் ஐந்து வகைப்படும். அவை: 1. ஆண்பால், 2. பெண்பால், 3. பலர்பால், 4. ஒன்றன்பால், 5. பலவின்பால்.
தொடர் முழுவதையும் அடைப்புக்குறிக்குள் எழுதும்போது முடிவில் அடைப்புக்குள் முற்றுப்புள்ளி இடல் வேண்டும். அதுவே கூடுதல் தகவலானால் அடைப்புக்குறிக்கு வெளியே முற்றுப்புள்ளி இடல் வேண்டும்.
எல்லாரும் கடைக்குச் சென்று விட்டனர். (அம்மா மட்டும் செல்லவில்லை.)
கலந்தே பேசுகின்றனர். (ஸ்கூல்
பலர், பேசும்போது ஆங்கிலச் சொற்கள் கலந்தே போன்றவை).
6.2.5.5 முப்புள்ளி
.
தொடரில் விடப்பட்ட பகுதியை முப்புள்ளி இட்டு நிரப்புவர்.
அன்றிலிருந்து இன்றுவரை...
சிந்தனைத் தொடர்ச்சியைக் குறிக்க முப்புள்ளி இடலாம்.
அவன் நல்லவனாகவே இருந்திருக்கலாம்...
சொற்களின் ஒலிப்புத் தொடர்ச்சியைக் குறிக்க முப்புள்ளி இடல் வேண்டும்
கொர்ர்...
அம்மா... அம்மா...