166
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
6.2.5.6 கேள்விக்குறி: (வினாவிசைக்குறி)
முற்றுப்புள்ளிக்கு அடுத்து, மிகுதியாகப் பயன்படுத்தப்படும் குறியீடு வினாக்குறியீடு ஆகும். பொதுவாக வினாச் சொற்கள் வரும் அனைத்துத் தொடர்களிலும் கேள்விக்குறி இடல் வேண்டும். ல்
உன் பெயர் என்ன?
வினாக்குறிப்புள்ள முற்றுப் பெறாத தொடர்களில் கேள்விக்குறி வரும்
நாங்கள் கடைக்குப் போகிறோம். நீங்கள்?
வியப்போடு கேட்கப்படும் கேள்விகளில் வினாக்குறி வரும்.
அமெரிக்காவா போகிறாய்?
> தொடர்ந்து வினாக்கள் வருமானால் இறுதியில் கேள்விக்குறி போட்டால் போதும்.
இது படகா இல்லை வீடா?
6.2.5.7 உணர்ச்சிக்குறி: (மெய்ப்பாட்டிசைக்குறி)
என்றே அழைக்கப்படுகிறது.
வியப்பு
இக்குறியீடு பெரும்பாலும் வியப்புக்குறியீடு மட்டுமல்லாமல் எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டும் இடங்களிலும் இக்குறி இடப்படுவதால் இது உணர்ச்சிக்குறி என்று அழைக்கப்படுவதே சரியாகும். இதனை இன்னும் தெளிவாக மெய்ப்பாட்டிசைக்குறி எனத் தேவநேயப்பாவாணர் கூறுகிறார்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்லாச் சொற்களின் பின்னும் உணர்ச்சிக் குறி இடப்படல் வேண்டும்.
எவ்வளவு அழகான மலர்! (வியப்பு)
நம் விருப்பப்படியே அனைத்தும் நன்றாக நடந்து விட்டது! (மகிழ்ச்சி)
குமரனின் தாத்தா விபத்தில் இறந்துவிட்டார்! (அதிர்ச்சி)
பல நூறு பேர் விபத்தில் இறந்துவிட்டனர்! (இரக்கம்)
இருளில் தோட்டத்திற்குப் போனால் பாம்பு கடித்துவிடுமோ! (அச்சம்)
உணர்ச்சிச் சொற்களின்
சொற்களின் பின்னாலும், சொற்கள் இரட்டித்து வரும் இடங்களிலும்
உணர்ச்சிக்குறி இடல் வேண்டும்.
ஆ!
ஐயோ!
பாம்பு! பாம்பு!
விளிச்சொல் தொடர்ந்து வரும்போது உணர்ச்சிக்குறி இடப்படல் வேண்டும்.
அம்மா! அப்பா!
என் உயிர் நண்பனே!