பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






அகவினா


சொல்லின் உள்ளே நின்று வினாப் பொருள் தந்தால் அகவினா ஆகும். அந்த வினா எழுத்தை நீக்கினால் சொல்லுக்குப் பொருள் இராது.

சான்று : யார்? எது? ஏன்?

புறவினா

சொல்லின் வெளியே நின்று வினாப்பொருள் தந்தால் புறவினா ஆகும். அந்த வினா எழுத்தை நீக்கினாலும் சொல்லுக்குப் பொருள் இருக்கும்.

சான்று : அவனா? ( ன்+ ஆ)?, இவன்தானே (ன்+ஏ)?, எவ்வூர்? (எ+ஊர்)?

1.8 மயங்கொலி எழுத்துகள்

எழுத்துகளின் ஒலிப்பு முறையை நாம் இதுவரை கண்டோம். இவ்வெழுத்துகளில் சில எழுத்துகள் மட்டும் ஒலிக்கும் முறைகளில் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். நாம் சரியாக ஒலிக்காவிடில் அவை வேறு எழுத்துகளாக உணரப்பட்டுவிடும். இவ்வாறு ஒலிக்கும் எழுத்துகளை மயங்கொலிகள் என்று கூறுவோம்.

ஒலிக்கும்போதே மயக்கத்தை உண்டுபண்ணும் என்பதால் இவை இப்பெயர் பெற்றன.

ண, ந, ன

ல, ள, ழ

ர, ற

ஆகிய எட்டு எழுத்தும் மயங்கொலிகள் ஆகும்.

1.8.1 எழுத்துகளின் பெயர்கள்

ஒருவரைத் தனியாக அடையாளப்படுத்திக் காட்டுவது அவருடைய பெயர். பெயரில்லாமல் யாருமே இருக்க முடியாது. அதுபோல, எழுத்துகளுக்கும் பெயர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, 'க' என்னும் எழுத்தைக் கூறும்போது, 'ககரம்' எனக் கூறவேண்டும். அதே போல் 'ஏ' என்னும் எழுத்தைக் கூறும்போது, 'ஏகாரம்' எனக் கூறவேண்டும். இவ்வாறு எழுத்துகளுடன் கரம், காரம், கான் எனச் சாரியைச் சேர்த்துச் சொல்வோம்.

'QU'

'CIT'

'L'

இங்கு, மயங்கொலி எழுத்துகளுக்குரிய பெயர்களை அறிவோம்.

நுனி நா லகரம் என்று ஒலிப்பு அடிப்படையில் இது அழைக்கப்படுகிறது. மேலும் தனி லகரம் என்றும் கூறுவர்.

நா மடி 'ளகரம் என்று கூறுவர். இதனைப் பொது ளகரம் என்றும் கூறுவர்.

இதன் பெயர் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. தமிழுக்கே தனிச்சிறப்பு சேர்க்கும் எழுத்து என்பதால் இதைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.