172
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
நான் ஒரு விஷயம் சொல்லட்டா? என்றுதான் பெரும்பாலும் கேட்கிறோம்.
இங்கு, 'விஷயம்' என்பது வடசொல். இதனைத் தமிழ்ப்படுத்தி 'விடயம்' என்றும் கூறக் கேட்கிறோம்.
என் அண்ணா பெரிய நிறுவனத்தில் உத்தியோகம் பார்க்கிறான்.. என்று கூறக் கூடாது
என் அண்ணன் பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறான். என்று சொல்ல வேண்டும்.
நமக்குச் சோறு போடற தொழில் விவசாயம் என்பதை விட,
நமக்குச் சோறுபோடும் தொழில் உழவு என்பது நலம்.
எனக்கு மருத்துவராகனும்னு ஆசை என்பதை விட,
எனக்கு மருத்துவராக வேண்டும் என்று விருப்பம் என்பது அழகு மையாளோட சகோதரன் நான் எனக் கூறுவதைவிட
உமையாளின் உடன்பிறந்தவன் நான் எனக் கூறுதல் சரியானது.
இதுபோல இன்னும் சில சொற்களை அறியலாம்.
6.3.4 மொழிபெயர்க்க முடியாத சொற்பயன்பாடு
வடமொழிக்கோ, வடமொழியிலிருந்து
எல்லாச் சொற்களையும் தமிழிலிலிருந்து தமிழ்மொழிக்கோ மொழிபெயர்த்து எழுதுதல் கடினம். அப்படிப் பெயர்க்க முடியாத சொற்களை ஒலிப்பு மாறாமல் ஒலிபெயர்த்து எழுதுதல் நலம்.
எடுத்துக்காட்டாக,
மென்மொழியாள் என்னும் பெயரை வடமொழியில் மொழிபெயர்த்தல் இயலாது. அதனை மதுரபாஷிணி என எழுத முயல்வர். அப்படி எழுதுகையில் தவறு ஏற்படும். யாழ் என்பது ஒரு தொன்மையான இசைக் கருவி, வீணை வேறு விதமான இசைக்கருவி. பொருள் மாறுபாடு ஏற்படும். எனவே இப்படிப்பட்ட சொற்களை ஒலிப்பு மாறாமல் ஒலிபெயர்த்து எழுதுதல் நலம்.
6.3.5 வடமொழிக்கு அடுத்து, கலந்த மொழிகள்
தமிழ் மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு முஸ்லீம் அரசர்களது ஆட்சிக் காலத்தில் அரபு, உருது, பார்சி மொழிகள் தமிழில் கலந்தன. இவற்றிலிருந்தும் சில சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். ஆஜர், ரத்து, ஜப்தி, ஜாமீன், தணிக்கை, மகசூல், ஜில்லா இவை எல்லாம் இன்னும் அரசு ஏடுகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
சிங்களம், மலாய், சீனம்: வணிகப் போக்குவரத்துகளால் தமிழகத்துக்கு வந்த மொழிகள் மலாய் மற்றும் சீன மொழிகள்,