பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






6.3.10 ஆங்கில மொழியின் தாக்கம்


இறுதியாகவும் மிக உறுதியாகவும் தமிழுடன் கலந்த மொழி ஆங்கிலம். கிழக்கிந்திய கம்பெனியார் வரவால் நம் நாட்டுக்குள் நுழைந்த ஆங்கிலம் இன்றுவரை தமிழ்மொழியில் கலப்பதை அறிஞர்களால் மாற்றவே முடியவில்லை.

காலைல எந்திருச்சு டிபன் சாப்பிட்டுட்டு பஸ் ஏறி ஸ்கூலுக்குப் போனேன் என்று தொடர்ச்சியாய் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேச அனைவரும் கற்றுக் கொண்டு விட்டனர்.

காலையில் எழுந்து உணவு சாப்பிட்டுவிட்டுப் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றேன். என்று கூறுவதற்குத் தயங்குகிறார்கள்.

போலீஸ், சினிமா, சோப், டிக்கெட், பில், பேப்பர், பென்சில், ஓட்டல் போன்றவை பாமர மக்கள் வரை அனைவரும் அறிந்த தமிழ்ச் சொற்களாகவே மாறிவிட்டன.

ஆங்கிலமொழிச் சொற்களை இவ்வாறு பயன்படுத்தும்போது சரியான ஒலிக் குறிப்புகள் கொடுத்தல் வேண்டும். கலைச்சொற்களைத் தமிழில் எழுதும்போது இந்த ஒலிப்பு மயக்கம் வருதல் உண்டு.

6.4 தமிழ்மொழியில் பிற மொழிகளின் பயன்பாடு

நாம்

தமிழ்ச்

முற்காலத்தில் தமிழ்மொழியுடன் கலந்த பிறமொழிச் பிறமொழிச் சொற்களை சொற்களாகவே உச்சரித்தும் பயன்படுத்தியும் வருகிறோம். இப்படிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது, அவற்றைப் பின்வரும் முறைகளில் எழுதலாம்.

சொல்லின் பொருளை விவரித்துப் புதுச் சொல்லாகச் சொல்லலாம்.

உதாரணமாக,

Hospital

- மருத்துவமனை

இணையான புதுச் சொல்லைப் படைக்கலாம்

Computer

- கணினி

மொழிபெயர்த்து எழுதலாம்.

Telephone

தொலைபேசி

சொல்லை அப்படியே ஒலிபெயர்த்து எழுதலாம்.

Pencil

பென்சில்

இப்படி ஒலிபெயர்த்து எழுதுகையில் மூலமொழியின் ஒலிகளை அப்படியே பெயர்த்து எழுதுதல் வேண்டும். Hydrogen என்பதை ஐதரசன் என்றும், ஹைதரசன் என்றும் எழுதுவர். மூலமொழியின் சரியான ஒலிப்புப்படி ஹைட்ரஜன் என்று எழுதுவதே சரியாகும். கைட்ரஜன் என எழுதும்போது, தமிழ் இலக்கண அமைப்பின்படி மொழிமுதல் வரும் வல்லின எழுத்துகள்