பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

177






பயிற்சிகள்

அ) பின்வரும் தொடர்களுக்குப் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

1.

நான் தந்த நூல் இஃது

(அல்ல/ அன்று)

2.

இந்தச் செயலை நீதான் செய்திருப்பாய்

(அல்லவா?/ அல்ல?)

3.

கவிஞர் முடியரசன் எழுதிய கவிதைகள் இவை

(அல்ல/ அன்று)

4.

நான்கு

ஐந்து மணிக்கு வந்துவிடுவேன். (அல்லது/ அல்ல)

5.

சேர, சோழ, பாண்டியர்

மூவேந்தரும் வந்தனர். (அற்ற/ ஆகிய)


பின்வரும் தொடர்களில் சரியான சொற்சேர்க்கை அமைந்த தொடருக்குச் சரி குறியிடுக.

1. வீட்டின் கதவருகில் திருடன் மறைந்திருந்தான்.

வீட்டின் கதவு அருகில் திருடன் மறைந்திருந்தான்.

2. சுயசிந்தனையற்ற மனிதர் செய்யும் செயல் ஆய்வுக்குரியதாகும்.

சுயசிந்தனை அற்ற மனிதர் செய்யும் செயல் ஆய்வுக்குரியதாகும்.

3. நீயல்லவா இதைச் சொல்லியிருக்க வேண்டும்?

நீ அல்லவா இதைச் சொல்லியிருக்க வேண்டும்?

4. என் கண்ணல்ல, இங்கே வா!

என் கண் அல்ல, இங்கே வா!

5. இன்றுமுதல் பள்ளிக்கு விடுமுறை.

இன்று முதல் பள்ளிக்கு விடுமுறை.

இ) பொருத்துக.

1. வினாக்குறி

2. முற்றுப்புள்ளி

?

3. முக்காற்புள்ளி

!

4. வியப்புக்குறி

5. காற்புள்ளி