178
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பின்வரும் தொடர்களுக்குப் பொருத்தமான நிறுத்தக்குறி இடுக.
1. நாளை என் வீட்டிற்கு வருவாயா
2. ஆ என்னே தாஜ்மகாலின் அழகு
3. தமிழிலக்கணம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என ஐவகைப்படும்
4. உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது
5. அணி என்பதற்கு அழகு என்று பொருள்
) பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கூறுக.
1. பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்றதால், கண்மணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
2. கவினும் கண்ணனும் கிரிக்கெட் விளையாடினார்கள்.
3. அப்பா ஆஸ்பிட்டலுக்குச் சென்றார்.
4. நான் புதிதாக டேபிளும் சேரும் வாங்கினேன்.
5. என் தம்பி வக்கீலாகப் பணிபுரிகின்றான்.
) பின்வரும் உரைப்பகுதியைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.
The Tamil grammarians divide all the words of their language into four principal parts, viz. Nouns, Verbs, Particles and Adjectives.
எ) ஓரிரு தொடரில் விடை தருக.
1. சேர்த்துப் படிப்பதற்கும் இடைவெளிவிட்டுப் படிப்பதற்கும் எடுத்துக்காட்டுத் தொடர்கள் கூறுக.
2. கண்ணன் படித்து/ விட்டான். இத்தொடரில் இடைவெளிவிட்டுப் படிப்பதால் ஏற்படும் பொருள் மாறுபாடு யாது?
3. குமரன்தானே வேலைகளைச் செய்தான் - குமரன் தானே வேலைகளைச் செய்தான். இவ்விரு தொடருக்கும் என்ன வேறுபாடு?
4. வினாக்குறி வருமாறு இரு தொடர் அமைத்துக் கூறுக.
5. பிறமொழி கலவாமல், தூய தமிழ்ச்சொற்களைக் கொண்டு ஒரு தொடர் கூறுக.
6. பின்வரும் தொடரில் வினாக்குறியையும் வியப்புக்குறியையும் பயன்படுத்தி இரு தொடர் உருவாக்குக.
உன் கையெழுத்து அழகாக உள்ளது.