பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

9






'GOOT'

'ந'

'Gor'

'ர'

'ற'


மூன்று சுழி 'ண' என்று நாம் அழைக்கின்றோம். ஆனால், இதன் இன எழுத்தான டகரத்தோடு இணைத்துச் சொல்லவேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு எழுத்தும் ஒரே இடத்திலேயே பிறக்கின்றன. எனவே இதனை டண்ணகரம் என்று கூறுதல் வேண்டும்.

தகரமும் நகரமும் ஒரே இடத்தில் பிறப்பதால் தந்நகரம் என்று இது அழைக்கப்பெறும்.

இரண்டு சுழி னகரம் என்று இதனை நாம் கூறுவோம். இருசுழி னகரம் என்றும் இது அழைக்கப்படும். டண்ணகரத்தைப் போலவே றன்னகரம் என்று அடையாளப்படுத்தப்படும்.

முன்னால் வரும் எழுத்தோடு சேர்த்து இது ஏனென்றால் இவை இரண்டும் ஒரே இடத்தில் பிறக்கின்றன.

இடையின எழுத்து என்பதால், இடையின ரகரம் என்று அழைக்கப்படும்.

வல்லின எழுத்து என்பதால், வல்லின றகரம் என்று அழைக்கப்படும்.

1.8.2 'ண', 'ந', 'ன' வேறுபாடு

மயங்கொலி எழுத்துகளுள் 'ண', 'ந', 'ன' ஆகிய மூன்றும் தவறாக ஒலிக்கப்பட்டாலும், எழுதப்பட்டாலும் பெரிய பொருள் மாறுபாட்டைக் கொடுக்கும்.

1.8.3 ணகர, நகர, னகரப் பயன்பாடு

மயங்கொலி எழுத்துகளுள் முதலில் 'ண', 'ந', 'ன' ஆகிய மூன்றும் பயன்படும் இடம்பற்றிக்

காண்போம்.

இம்மூன்றில் எந்த எழுத்து எங்கு வரவேண்டும் என்பது குறித்துச் சிலநேரங்களில் குழப்பம் ஏற்படும். தந்நகரம் எப்போதும் சொல்லின் முதலிலேயே வரும். றன்னகரமும், டண்ணகரமும் எங்கு வரும்? இந்தக் கேள்விக்கான பதில் இவ்வெழுத்துகளின் பெயரிலேயே உள்ளது.

'ட' வரும் சொற்களில் ண வரும். அதாவது டண்ணகரம் 'ட' வுடன் சேர்ந்தே வரும். உதாரணமாக,

நான் செழியனைக் கடையில் கண்டேன்.

நாங்கள் திருமண மண்டபத்திற்குச் சென்றோம்.

அக்காவுடன் நான் சண்டை போட்டேன்.

இதே விதியை றன்னகரத்திற்கும் கொள்ளலாம்.

பூனை எலியைக் கொன்றது.

கபிலன் முறுக்கைத் தின்றான்.