பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

181






ஊ) உரைப்பகுதியைத் தமிழில் மொழிபெயர்த்தல்.


இலக்கண

நூலாசிரியர்கள்,

பிரிக்கின்றனர்.

அவை பெயர்ச்சொல்,

தமிழ்மொழியிலுள்ள வினைச்சொல்,

சொற்களை நால்வகையாகப் இடைச்சொல், உரிச்சொல்

என்பனவாகும்.

எ) ஓரிரு தொடரில் விடை.

1. சேர்த்துப் படித்தல் - விளக்கை ஏற்றிவை.

இடைவெளிவிட்டுப் படித்தல் - தாய்/ தன் மகனிடம்/ "ஒழுங்காகப் பாடம் படி"/ என்று

கூறினாள்.

2. இடைவெளிவிடாமல் படித்தால், கண்ணன் படித்துமுடித்தான் எனப் பொருள் தரும். இடைவெளிவிட்டுப் படித்தால், கண்ணன் படித்தபிறகு அதனை விட்டுவிட்டான் எனப் பொருள் தரும்.

3. முதல் தொடர், குமரன் மட்டுமே வேலை செய்தான். வேறு யாரும் செய்யவில்லை எனப் பொருள் தருகிறது. இரண்டாவது தொடர், குமரன் யாருடைய உதவியும் இல்லாமல் அவனாகவே வேலை செய்தான் எனப் பொருள் தருகிறது.

4. அ) நான் கேட்ட கேள்விக்கு ஏன் விடையளிக்கவில்லை?

ஆ) நேற்று ஏன் விளையாடவரவில்லை?

5. தமிழ் மிகவும் இனிமையான மொழி.

6. உன் கையெழுத்து அழகாக உள்ளதா? (வினா)

ஆ! உன் கையெழுத்து எத்துணை அழகு! (வியப்பு)

7. திருக்குறள் 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படுகிறது. இந்நூல், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் அறம், பொருள், இன்பம் என முப்பிரிவு உள்ளது. 133 அதிகாரமும் ஓர் அதிகாரத்திற்கு 10 குறட்பா என 1330 குறட்பாவையும் இந்நூல் கொண்டுள்ளது.

8. என் தந்தை மதுரையில் வேலை செய்கிறார்.

9. ஒற்றை மேற்கோள்குறி

10. நேற்று நானும் என் நண்பனும் கடற்கரைக்குப் போனோம்.