தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
15
மக்கள் பசியாற உணவளித்த உங்களுக்கு நன்றி என்று கூறுவதற்குப் பதிலாக,
மக்கள் பசியார உணவளித்த உங்களுக்கு நன்றி எனக் கூறினால் அது பெரிய தவறாய் முடியும். ஏனெனில், பசியாற என்பது பசி தணிய என்ற பொருளையும், பசியார என்பது பசி நிறைய என்ற பொருளையும் தந்துவிடும்.
இரங்கு இறங்கு
இரை
இறை
T
மனமிரங்கு கீழே இறங்கு
உணவு
கடவுள்
உரவு
அறிவு
உறவு
உரை
உறை
T
சொந்தம்
பேச்சு
பை
எரி
தீ
எறி
வீசு
பொறி
இயந்திரம்
பொரி
நெற்பொரி
மரம்
T
தாவரம்
மறம்
மாரி
மாறி
வீரம்
மழை
மாற்றம்
விரல்
கை விரல்
விறல்
வலிமை
சுரா
கள்
சுறா
மீன்
எனப் பொருள் வேறுபாடு காட்டுவதை உணரலாம்.
1.11 மொழி முதல், இடை, கடை எழுத்துகள்
தமிழில் ஒரு சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் என்னென்ன எழுத்துகள் வரும் என்பதை நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இக்காலத்தில் பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து வழங்குகின்றன. இத்தகைய சொற்களில் பெரும்பான்மையான எழுத்துகள் தமிழில் மொழிக்கு முதலில் வராதவை. இவற்றைக் கொண்டே தமிழ்ச்சொற்கள் எவை, பிறமொழிச்சொற்கள் எவை என வேறுபடுத்தி அறியலாம்.