பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







1.11.1 மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள்

உயிரெழுத்துகளில்

பன்னிரண்டும்

மொழிக்கு

முதலில் வரும்.

பின்வரும்

எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

அம்மா, ஆடல், இரவு, ஈகை, உதவி, ஊஞ்சல், எழுத்து, ஏக்கம், ஐந்திணை, ஒட்டகம், ஓலை,

ஔவை.

உயிர்மெய் எழுத்துகளுள் பின்வரும் வரிசையிலுள்ள எழுத்துகள் மொழிக்கு முதலாகும்.

க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ய, வ ஆகிய பத்து எழுத்தும் மொழிமுதலாகும். இவற்றுள், முதல் ஆறு எழுத்து, அதன் வரிசையுடன் வரிசையுடன் பன்னிரண்டாகும். பன்னிரண்டாகும். இறுதியிலுள்ள நான்கு எழுத்துக்குரிய வரிசையில் வகர எழுத்தில் எட்டும், யகர எழுத்தில் ஆறும், ஞகர எழுத்தில் நான்கும் ஙகர எழுத்தில் ஒன்றும் மொழிக்கு முதலில் வரும்.

க வரிசை

(12) கடல், காற்று, கிளை, கீற்று, குடம், கூட்டல், கெடு, கேள், கைவேலை, கொடி, கோட்டை, கௌளி

ங வரிசை - (1) - ஙப்போல் வளை (ஆத்திசூடி) அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம் என அக்காலத்தில் வழக்கில் இருந்தன. 'ஙனம்' என்பது, இடத்தையும் தன்மையையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாகும். இக்காலத்தில் 'ங' எழுத்து மொழிமுதல் பயன்பாட்டில் இல்லை. எனவே, ங வரிசையில் எந்தச் சொல்லும் இக்காலத்தில் தொடங்குவதில்லை.

ச வரிசை (12) - சட்டம், சார்பு, சினம், சீற்றம், சுக்கு, சூடு, செந்தமிழ், சேர்த்தல், சைகை, சொத்து, சோளம், சௌக்கியம்

ஞ வரிசை – (4) - ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று. இக்காலத்தில் ஞெ, ஞொ ஆகிய இரண்டும் வழக்கில் இல்லை.

த வரிசை – (12) - தம்பி, தாய், திண்ணை, தீ, துன்பம், தூக்கம், தெய்வம், தேங்காய், தையல், தொழில், தோகை, தௌவல்

ந வரிசை

(12)

நொச்சி, நோய், நௌவி

-

நன்மை, நாடு, நிழல், நீளம், நுகத்தடி, நூல், நெல், நேற்று, நைதல்,

ப வரிசை (12) பள்ளி, பாடம், பிள்ளை, பீர்க்கங்காய், புன்னை, பூமாலை, பெண், பேழை, பைந்தமிழ், பொன், போக்கு, பௌவம்

ம வரிசை – 12) - மலர், மான், மிகை, மீன், முள், மூன்று, மென்மை, மேல், மைவிழி, மொழி, மோப்பம், மௌவல்

ய வரிசை – (6) - யவனர், யானை, யுகம், யூகம், யோசி, யௌவனம்

வ வரிசை - (8) - வண்டி, வாளி, வில், வீடு, வெட்சி, வேலை, வைகை, வௌவால்