பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






(OT.JIT.)


(1) உயிரெழுத்து, தனித்து வருதல்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ (ஓரெழுத்து ஒருமொழி)

(2) உயிரெழுத்து, மெய்யுடன் வருதல்

சால (ல் + அ), உலா (ல் + ஆ), பனி (ன் + இ), தீ (த் +ஈ), நடு (ட் + உ), பூ (ப் + ஊ), சேஎ, தே (த் + ஏ), தை (த் + ஐ), நொ (ந் + ஒ), போ (ப் +ஓ), கௌ (க் + ஔ)

மெய்யெழுத்துகள்

ஞ் - உரிஞ், ண்

மண், ந் - பொருந், ம் - மரம், ன்

பொன், ய்

வேய், ர்

-

வேர், ல் வேல், வ்

தெவ், ழ் - வீழ், ள்

வாள்

குற்றியலுகரம்

சுக்கு, மாசு, வண்டு, சால்பு, அஃது, பாலாறு

பிறமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும்போது, இங்குச் சுட்டிக்காட்டப்படாத எழுத்துகளில் முடிவதும் உண்டு. அவ்வாறு வரும் எழுத்துகளுடன் உகரம் சேர்த்து ஒலிக்கப்படுகிறது. (எ.கா.) இங்கிலாந் – இங்கிலாந்து,

1.12 மெய்ம்மயக்கம்

மெய்யெழுத்துகள் பதினெட்டு என நாம் அறிந்துள்ளோம். இவ்வெழுத்துகளுள் சில தம்முடன் தாம் மயங்கும். சில எழுத்துகள் தம்முடன் பிற மயங்கும். இவ்வாறு வருவதனை மெய்யெழுத்துகள் மயங்குதல் எனக் கூறுவர்.

எடுத்துக்காட்டாக, 'பள்ளி' இச்சொல்லைக் கவனியுங்கள். இதில், ளகர மெய்க்கு அடுத்து அதே மெய் (ள் + இ) வந்துள்ளது. இவ்வாறு வருவது மெய்ம்மயக்கம்.

மற்றோர் எடுத்துக்காட்டைப் பாருங்கள். 'தங்கம்' இச்சொல்லில், ஙகர மெய்க்கு அடுத்துக் ககர மெய் (க் + அ) வந்துள்ளது. இவ்வாறு வருவதும் மெய்ம்மயக்கம்தான்.

எனவே ஒரு மெய்யெழுத்தானது, அதே மெய்யெழுத்துடனோ பிற எழுத்துகளுடனோ மயங்கி வரும் என அறிகிறோம், அவை, உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்பன.

1.12.1 உடனிலை மெய்ம்மயக்கம்

மெய்யெழுத்துகளுள் ரகரம், ழகரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்தையும் தவிர்த்து, ஏனைய பதினாறு மெய்யும் தம்முடன் தாம் கூடிவரும். அதாவது, மயங்கிவரும். பின்வரும் எடுத்துக்காட்டுச் சொற்களைக் கவனித்தால் நன்கு விளங்கும்.