பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

19







பக்கம், அங்ஙனம், அச்சம், விஞ்ஞானம், சட்டம், கண்ணன், தத்தை, எந்நாள், அப்பளம், வன்மம், செய்யாமை, வெல்லம், கொவ்வை, பள்ளம், பற்று, கன்னி

1.12.2 வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

மெய்யெழுத்துகளுள் க,ச,த,ப ஆகிய நான்கும் தவிர்த்து ஏனைய பதினான்கு மெய்யும் பிற மெய்யெழுத்துகளுடன் கூடிவரும். இவ்வாறு மெய்ம்மயங்குவதை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்கிறோம். பின்வரும் எடுத்துக்காட்டுகள் வழி, இதனைப் புரிந்துகொள்ளலாம்.

வங்கம், பஞ்சு, திட்பம், வெண்கலம், பந்து, பம்பரம், செய்தி, போர்வை, வெல்க, தாழ்ப்பாள், கேள்வி, கற்குவியல், மன்றம்.

அறிவோம்! தெளிவோம்!

முயற்சியா? முயற்ச்சியா?

முயற்சி என்பதே சரி. 'ற்', 'ட்; என்னும் வல்லினமெய்களுக்கு அருகில் அதே வல்லினமெய்கள் எப்போதும் வருவதில்லை.

பயிற்சி -சரி

பயிற்ச்சி

தவறு

நட்பு

-சரி

நட்ப்பு

-தவறு

முயற்சித்தான்/ முயன்றான்- எது சரி?

முயன்றான் என்பதே சரி. முயற்சி என்பது தொழிற்பெயர். இதிலிருந்து வினைமுற்று உருவாகாது. பயிற்சி என்னும் சொல்லைப் பயிற்சித்தான் என்று நாம் கூறுவதில்லை. பயின்றான் என்றே கூறுகிறோம். இதனை நினைவிற்கொண்டால், பிழையைத் தவிர்க்கலாம்.

1.13 எழுத்துப்போலி

நலமா, நலனா?

நிலமா, நிலனா?

மேற்கண்டவற்றுள் எவை சரியானவை? இத்தகைய சொற்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'நலம்', 'நிலம்' என வரவேண்டிய சொற்கள், 'நலன்', 'நிலன்' எனவும் வருகின்றன. இவ்வாறு ஒரு சொல்லில் வரவேண்டிய எழுத்துக்கு மாற்றாக வேறோர் எழுத்து மயங்கி வருவதனை 'எழுத்துப் போலி என்கிறோம். இதனால், பொருள் மாற்றம் ஏற்படுவதில்லை. எழுத்துப்போலியில் மூவகை உண்டு. அவை முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என்பன.

1.13.1 மொழி முதற்போலி

பசல்

-

பைசல்

மஞ்சு மைஞ்சு

மயல் மையல்

-