பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







மேற்கண்ட எடுத்துக்காட்டில், தடித்த எழுத்துகளில் உள்ள சொற்கள் எழுத்துப்போலிகள். மொழிமுதல் எழுத்தான 'ப' எழுத்துக்கு, 'பை' என்பது போலி. இவ்வாறே, 'ம' எழுத்துக்கு 'மை' என்பது போலி. சகரம், ஞகரம், யகரம் ஆகிய எழுத்துகள் வரும்போதும்தான் இத்தகைய எழுத்துப்போலிகள் வருகின்றன.

1.13.2 மொழி இடைப்போலி

அமச்சு அமைச்சு

இலஞ்சி - இலைஞ்சி

அரயர் – அரையர்

மேற்கண்ட எடுத்துக்காட்டில், தடித்த எழுத்துகளில் உள்ள சொற்கள் எழுத்துப்போலிகள். இங்கு, மொழிக்கு இடையில் வந்துள்ளன.

1.13.3 மொழி இறுதிப்போலி

அகம் அகன்

சுரும்பு - சுரும்பர்

பந்தல் – பந்தர்

சாம்பல் - சாம்பர்

மேற்கண்ட சொற்களில் தடித்த எழுத்துகள் கொண்டவை எழுத்துப்போலிகள். இவை சொல்லின் இறுதியில் வந்துள்ளன. இதனால், பொருள் மாற்றம் ஏற்படுவதில்லை.

இதுவரை எழுத்துகள் மயங்கி வருவதனையும் எழுத்துப்போலிகளாக வருவதனையும் அறிந்தோம். இவற்றையும் கவனத்தில் கொள்வோம்.

அறிவோம்! தெளிவோம்! சுவற்றிலா? சுவரிலா?

எது சரி?

சுவரில் என்பதே சரி. சுவல் என்பதன் எழுத்துப்போலி சுவர் என்பது. சுவல் என்பதற்குத் தோள் என்று பொருள். தோள் போலத் தாங்கி நிற்பது என்னும் காரணப்பெயர் அடிப்படையில் சுவல் – சுவர் என வழங்குகிறது.

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளில் 'ற்' என்பது இல்லை. ஆகவே, 'சுவற்' என்பது ஒரு சொல்லில்லை. இதிலிருந்து 'சுவற்றில்' என்பது எவ்வாறு உருவாகும்? சிந்தியுங்கள். பிழையின்றி எழுத முயல்வோம்.