பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







இன்னும் சரியாக முளைக்கவில்லை. இங்கு வேறு எந்தப் பறவையையும் காணோமே" என்று கூறியவாறு, அந்தச் சிறுபறவையை மெதுவாகக் கையிலெடுத்தார். துணியால் அதனை அரவணைத்தவாறே வீட்டிற்குள் கொண்டு சென்றார். இப்போது, சிறுவனின் வீட்டிலும் 'கீச், கீச்' ஒலி மெல்லக் கேட்கத் தொடங்கியது.

எ) பின்வரும் செய்தியிலுள்ள மயங்கொலிப் பிழைகளை நீக்கி எழுதுக.

தமிலில் சிரந்த இலக்கியப் படைப்புக்காக 2021ம் ஆன்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எலுத்தாலர் அம்பை தேர்வு செய்யப்பட்டுல்லார். அம்பை எழுதிய 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ர சிருகதைத் தொகுப்புக்குத் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துல்லது. "பென் யாருக்கும் உடைமைப் பொருழ் அல்லள்; தனக்கென்று தனி விருப்பங்களும், சுயமரியாதையும் கொன்டவல் பென்" என்பதை அம்பையின் படைப்புகள் வளியுருத்துகின்றன.

எழுத்துகளின் பெயர்களை எழுதுக

A

ல்

T

ஐ) ஓரிரு தொடரில் விடை தருக.

1.

கல்வி - இச்சொல்லில் அமைந்துள்ள அடிப்படை ஒலிகளைக் கூறுக.

2. உலக மொழிகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ள உயிரொலிகள் எவை?

3. குறிலோசை, நெடிலோசை இவ்விரண்டையும் வேறுபடுத்தும் ஏதேனும் ஒரு சொல் கூறுக.

4.

அது, இது – இவ்விரண்டில் அருகிலுள்ள பொருளைக் குறிப்பிடும் சொல் எது?

5. 'முக்கனியில் சிறந்தது எக்கனி?' - இத்தொடரில் இடம்பெற்றுள்ள வினா எழுத்து எது?

6. ஒலிக்கும் முறையில் வேறுபடும். ஆனால், ஒலிக்கும் அளவில் வேறுபடாது. இக்கூற்று எந்த எழுத்துகளுக்குப் பொருந்தும்?