26
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
விடைகள்
அ) சரியான எழுத்து
1. புளி 2. பலா 3. நாற்காலி 4. நாடகம் 5. பதினெண்
ஆ) படத்திற்கேற்ற சரியான சொல்
1. கொக்கு 2. பெட்டி 3. சேவல் 4. பூட்டு 5. நண்டு
இ) பொருத்துக.
சொல்
1. கனி
2. குளம்
3. கான்
4. ஒலி
பொருள்
பழம்
நீர்நிலை
காடு
ஓசை
5. மறம்
வீரம்
பாடலில் சரியான சொல்
காலை, பாட்டு, விளையாட்டு, கொள்ளு
உ) படம் குறிக்கும் ஒலிப்புக்குரிய எழுத்துகள்
2. 60T
3. ந
1. ண
ஊ) நுண்கதையில் இடம்பெற்றுள்ள சுட்டுச் சொற்கள், சுட்டுத் திரிபுகள்
ஆற்றங்கரையோரம் ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் பறவைகளின் 'கீச் கீச்' ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆற்றின் கரையோரம் இருந்த வீடு ஒன்றில் சிறுவன் ஒருவன் தன் தாயுடன் வசித்து வந்தான். ஒருநாள், காற்று சுழன்றடித்தது. மரத்திலிருந்த இலைகள் உதிர்ந்தன. மழை சடசடவெனப் பெய்யத் தொடங்கியது. அச்சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று, மழை பெய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, சிறு பறவை ஒன்று தட்டுத் தடுமாறி மேலிருந்து விழுந்தது. அது பறக்கமுடியாமலும் மழைநீரில் நனைந்துகொண்டும் துன்பப்பட்டது. சிறுவன், உடனே தன் அம்மாவை அழைத்தான். "அம்மா, அந்தப் பறவையைப் பாருங்கள். பறக்கமுடியாமல் கீழே விழுந்துவிட்டது." என்று கூறினான். அங்கு வந்த சிறுவனின் அம்மா, "அடடா, இந்தப் பறவைக்கு இறக்கைகூட இன்னும் சரியாக முளைக்கவில்லை. இங்கு வேறு எந்தப் பறவையையும் காணோமே" என்று கூறியவாறு, அந்தச் சிறுபறவையை மெதுவாகக் கையிலெடுத்தார். துணியால் அதனை அரவணைத்தவாறே வீட்டிற்குள் கொண்டு சென்றார். இப்போது, சிறுவனின் வீட்டிலும் 'கீச், கீச்' ஒலி மெல்லக்
கேட்கத்தொடங்கியது.