முனைவர்
பழனிவேல் தியாக ராஜன் அமைச்சர் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
d
ந
IT
வாய்மையே
அ
ாசு
வெல்லும்
தலைமைச் செயலகம், A606060-600 009.
நாள்....
26 Aug 2024
வாழ்த்துரை
சங்கம் வளர்த்த தமிழ்ச்சோலையில் குழலும் யாழும் மயங்கும். உயிருக்கு ஒப்பாய் உயிரெழுத்து; தனித்து இயங்கா மெய்யெழுத்து; உடம்புடன் கலந்த உயிரேபோல் உயிர்மெய்யென எண்ணிடலங்காப் பெருமைக்குரிய சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி. இம்மொழி, பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும், எளிதாகத் தொடர்பு கொள்ளும் தொடர்பு மொழியாகவும் உள்ளது. தமிழர்கள் மட்டுமின்றி, பல அயலகத்தாரும் தமிழில் இலக்கண இலக்கியங்களை இயற்றியுள்ளார்கள். எம்மொழியாயினும் அம்மொழியின் அடிப்படைக் கூறுகளைக் கற்றுத் தெளியவேண்டும். அத்தகைய வகையில் 'தன்னேரிலாத் தமிழ்' என்ற தமிழின் சிறப்பினை உணர்ந்தவர்கள் தமிழின் அடிப்படைகளை மெல்ல மெல்லக் கற்கின்றனர். இதன் மூலம் தமிழைப் பிழையின்றிப் பேசவும், எழுதவும் முயற்சி செய்து வருகின்றனர். இன்று, உலகெங்கும் தமிழின் செம்மாந்த நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் வந்தவண்ணமுள்ளன. அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகமும் குறுகிய காலத்தில் தமிழைப் பிழையின்றிப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் ‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்' என்ற புத்தகத்தை உருவாக்கியுள்ளது.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின், தமிழைப் பிழையின்றி எழுதுவோம் என்ற இப்புத்தகத்தின் மூலம், தமிழின் மரபு சார்ந்த இலக்கணக் கூறுகளை அறிவதுடன், பயன்பாட்டு அடிப்படையில் இலக்கணத்தைப் பயன்படுத்தவும் முடியும். மேலும், சூழல் சார்ந்த பொருள்களுடன் தமிழ் இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்துப் பிழையின்றிப் படித்து எழுதுவதுடன் வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியும். 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற தமிழ்மகள் ஔவையின் கூற்றினை மேன்மேலும் மேம்படுத்திக் கொண்டுவரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அளப்பரிய . தமிழ்த்தொண்டை வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்த் தொண்டு!
1. Thin