பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

31






2.2:1 பகுதி


ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு பகுதி ஆகும். எனவே, இதனை முதனிலை என்றும் வழங்கலாம். பகுதி பெயர்ச்சொல்லாக வந்தால் பொருள், இடம், காலம், சினை, குணம் தொழில் ஆகிய அறுவகைப் பெயர்ச்சொற்களுள் ஒன்றாகவும் வினைச்சொல்லாக இருப்பின், விகுதி பெறாத ஏவல்வினையாகவும் அமையும். பகுபதத்திலுள்ள பகுதி பொருள் உடையதாக இருக்கும். உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.

1. பொருட்பெயர்

2. இடப் பெயர் 3. காலப் பெயர்

4. சினைப் பெயர் 5. குணப் பெயர்

6. தொழிற் பெயர்

2.2.2 விகுதி

- பொன்னன் (பொன் + அன்)

– வெற்பன் (வெற்பு + அன்)

- ஆதிரையன் (ஆதிரை + அன்)

- கண்ணன் (கண் + அன்)

– கரியன் (கருமை + அன்)

- சொல்லன் (சொல் + அன்)

பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால், இதனை இறுதிநிலை என்றும்

வழங்குவர்.

உண்டான் என்னும் பகுபதத்தில் (உண் + ட் + ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை (உயர்திணை), பால் (ஆண்பால்), எண், (ஒருமை) இடம் (படர்க்கை) ஆகியவற்றைக் காட்டிநிற்கும்.

ஆண்பால் பெயர் விகுதிகள்

அன், ஆன், மன், மான்

சான்று: வெற்பன்(அன்), வானத்தான்(ஆன்), வடமன்(மன்), மலையமான்(மான்),

பெண்பால் விகுதிகள்

அள், ஆள், தற்போது இ, ஐ என்ற விகுதிகளும் வருகின்றன.

சான்று: இவள் (அள்), குழலாள்(ஆள்), பொன்னி(இ), கோதை (ஐ).

பலர்பால் பெயர் விகுதிகள்

அர், ஆர், மார்,

சான்று: மறவர்(அர்), ஓதுவார்(ஆர்), தேவிமார்(மார்)

ஒன்றன்பால் பெயர் விகுதி

து

ஈற்றில் முடிவது ஒன்றன்பால் ஆகும்.