பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






சான்று: அது, யாது, அஃது,

பலவின்பால் பெயர் விகுதிகள்

வை, அ, கள்.

சான்று: அவை (வை), கரியன(அ), கிளிகள்(கள்).


பன்மையைக் குறிக்கப் பெயர்களோடு சேர்க்கப்படும் 'கள்' விகுதி உயர்திணைப் பன்மைப் பெயர்களோடும் அஃறிணைப் பன்மைப் பெயர்களோடும் சேர்க்கப்படுகின்றன.

சான்று: நாம்,

இவை, இச்சொற்களே பன்மையைக் குறிக்கும். பன்மையைக் குறிக்க கள் விகுதியை மேலும் இவற்றோடு சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் பயன்பாட்டில் சேர்க்கின்றோம். இதை விகுதி மேல் விகுதி என்பர்.

நாங்கள் (நாம் + கள்) அவர்கள்(அவர் + கள்), உயர்திணைப் பன்மைப் பெயர்கள்.

இவை, இக்கால வழக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், இவைகள் (இவை + கள்) என்னும் சொல் தவறான சொல்லாக்கமாகக் கொள்ளப்படுகிறது. 'இது' என்னும் ஒருமைக்கு 'இவை' என்பதே பன்மையாகும்.

அறிவோம்! தெளிவோம்!

ஓட்டுநர்/ ஓட்டுனர் - எது சரி?

ஓட்டுநர் என்பதே சரி. ஓட்டு என்னும் வினைச் சொல்லுடன் 'நர்' என்னும் விகுதி சேர்ந்து பெயராகிறது.

அனுப்பு + நர்

செலுத்து + நர்

இயக்கு + நர்

நடத்து + நர்

இவை போன்று பெயர்ச்சொற்கள் உருவாகின்றன. 'ஓட்டு' என்பதுடன் 'னர்' சேர்ந்து பெயராக மாறுவதில்லை. இது, தவறான சொல்லாக்கம். ஓட்டினர், அனுப்பினர், இயக்கினர், நடத்தினர் என வரும் வினைமுற்றுகளில், 'னர்' என்னும் வடிவம் இருப்பதைக் காணுங்கள். இச்சொற்களில், (ஓட்டு + (இ)ன் + அர்) னகர ஒற்று காலங்காட்டும் இடைநிலையாக உள்ளது. 'அர்' என்பது விகுதியாக உள்ளது. எனவே, ஓட்டுநர் என்பதை பெயரைக் குறிக்கவும் ஓட்டினர் என்பதை வினையைக் குறிக்கவும் பயன்படுத்துவோம்.

இடம்

பேசுகின்றவன் தன்னைத்தானே குறித்துக் கூறும் சொல்- தன்மை. தனக்கு முன்னால் யாரிடம் பேசுன்றானோ; அவனைக் குறிக்கும் சொல் முன்னிலை. தன்னையும் குறிக்காமல், எதிரில் இருப்பவனையும் குறிக்காமல் வேறொருவனைக் குறிக்கும் சொல், படர்க்கை. தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.