தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
33
நான் பார்த்தேன்
- தன்மை
நீ பார்த்தாய்
– முன்னிலை
அவர் பார்த்தார்
- படர்க்கை
2.2.3 இடைநிலை
முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. பெரும்பாலும் காலம்காட்டும் உறுப்பாகவும், எதிர்மறைப் பொருள்தரும் உறுப்பாகவும் வரும். வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும். உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் உண் முதனிலை ட் இடைநிலை ஆன் - இறுதிநிலை (விகுதி)
'இடைநிலை'
―
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம். இந்த இடைநிலை இறந்தகால இடைநிலை, நிகழ்கால இடைநிலை, எதிர்கால இடைநிலை என மூன்றாகும்.
இறந்தகால இடைநிலை – த், ட், ற், (இ)ன்
நிகழ்கால இடைநிலை - கிறு, கின்று, ஆநின்று
எதிர்கால இடைநிலை - ப், வ்
எதிர்மறை இடைநிலை
―
ஆ, ஆல், இல்
=
அறிவோம்! தெளிவோம்!
வேண்டாம்/ வேண்டா - எது சரி?
வேண்டா என்பதே சரி. வேண்டும் என்பதன் எதிர்ச்சொல், வேண்டா என்பதே. வேண்டா வேண்டு + + ஆ. இச்சொல்லில், 'ஆ' என்னும் எழுத்து எதிர்மறைப் பொருளைத் தருகிறது. வேண்டாம் வேண்டு + ஆம். இச்சொல்லில், ஆம் என்னும் சொல், நேர்மறைப் பொருளைத் தருகிறது. ஆகவே, எதிர்மறைப்பொருளில் எதிர்ச்சொல்லாக வருவது, வேண்டா என்னும் சொல்தான். இதன் பொருள் அறியாமல் பேச்சிலும் எழுத்திலும் பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
இறந்தகால இடைநிலை
நடந்தான், கேட்டாள், கற்றார், பாடினாள் இவை யாவும் இறந்தகால வினைமுற்றுகள். இச்சொற்களின் இடையில் உள்ள த், ட், ற், இன் ஆகிய நான்கும் இறந்த காலம் உணர்த்தும் இடைநிலைகள் ஆகும்.