பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







எ.கா : கூர், மிகு, உறு, தவ, நனி, கழி

மேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை.

சிந்தனை வினா : கடல் இச்சொல் பகுபதமா? பகாப்பதமா? கண்டறிக.

2.4 மூவகை மொழி

சொற்பொருள் அடிப்படையில் மொழி மூவகைப்படும். அவை,

1) தனிமொழி

2) தொடர்மொழி

3) பொதுமொழி

என்பவை ஆகும்.

2.41 தனிமொழி

ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது தனிமொழி எனப்படும்.

(எ.கா) செல், போ, கண், மரம்

இங்கே, எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தனிச்சொல் ஒவ்வொன்றும் தனக்கான ஒரே ஒரு பொருளில் மட்டும் வந்துள்ளது.

2.4.2 தொடர்மொழி

தனிமொழிகள் பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும்.

(எ.கா) அறம் செய், அறநூல் படி, இன்சொல் கூறு, பண்பு காட்டு

இங்கே தனிச்சொற்கள் பல சேர்ந்து தொடராக வந்து பொருளைத் தந்துள்ளன.

2.4.3 பொதுமொழி

ஒரு

பொருளையும்,

தொடர்மொழியாகப்

அதாவது,

ஒரு சொல்லே தனிமொழியாக நின்று பிரிந்துநின்று வேறு பொருளையும் பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும். தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக வரும் சொல்லே பொதுமொழி.

(எ.கா) அந்தமான், பலகை