தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
37
அந்தமான் என்னும் ஒரு சொல், தனிமொழியாக நின்று அந்தமான் என்னும் தீவைக் குறிக்கும். அந்தமான் என்னும் சொல்லை அந்த + மான் என்று பிரித்தால் அந்த மான் என்னும் தொடர்மொழியாக நின்று ஒரு விலங்கைக் குறிக்கும்.
பலகை என்னும் ஒரு சொல், தனிமொழியாக நின்று பலகை (மரப்பலகை) என்னும் பொருளைத் தரும். பலகை என்னும் ஒரு சொல்லையே பல+கை என்றும் பிரிக்கலாம். இவ்வாறு பிரித்தால் பல கைகள் என்னும் தொடர்மொழியாகப் பொருளைத் தருகிறது.
சிந்தனை வினா : 'வைகை' -இச்சொல் தனிமொழியா? பொதுமொழியா? பொதுமொழியாயின் இருபொருள் தருக.
2.5 சொல்லின் வகை
இலக்கிய வகைச் சொற்கள். இலக்கணவகைச் சொற்கள் எனச் சொற்கள் இருவகைப்படும்.
2.5.1 இலக்கியவகைச் சொற்கள்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என இலக்கியவகைச் சொற்கள் நான்கு
வகைப்படும்.
2.5.1.1 இயற்சொல்
படித்தவர், படிக்காதவர் என்னும் பாகுபாடின்றி, அனைவராலும் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடிய சொல் இயற்சொல். 'பூ', 'யானை', 'நாய்', 'மாடு' முதலான சொற்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. ஆதலால் இயற்சொற்களாயின. இயற்சொல் - இயல்பான சொல்.
பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என இயற்சொற்கள் இருவகைப்படும்.
எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல் எனப்படும்.
(எ.கா) சூரியன், நிலவு, காற்று, தீ.
இவை போன்ற
இயற்சொற்களாயின.
இயற்சொற்கள்
பெயர்ச்சொற்கள் ஆதலால், இவை பெயர்
எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல்
எனப்படும்.
(எ.கா)
படித்தான், வந்தார், பாடினாள், பறந்தது, மேய்ந்தன.