பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

39






ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்


வேழம், வாரணம், கழை ஆகிய சொற்கள் "யானை" என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.

> பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்

ஆவி இச்சொல் உயிர், பேய், மெல்லிய புகை ஆகிய பல பொருள்களை உணர்த்துகின்றன. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொற்கள் பல பொருள்களைத் தருவதால் அவற்றைப் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.

2) வினைத்திரிசொல்

பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல்

கற்றவருக்கு மட்டுமே பொருள்

வினைத்திரிசொல் எனப்படும்.

எ.கா: வினவினான், விளித்தான், நோக்கினான்.

வினைத்திரிசொல் இரு வகைப்படும்.

i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்

ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்

. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்

செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் 'சொன்னான்' என்னும், ஒரு பொருளையே குறிப்பதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.

ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் :

வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருள்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் என்பர்.

2.5.1.3 திசைச்சொல்

வடமொழி அல்லாத பிறமொழிச்சொற்கள் அம்மொழிகளில் எந்தெந்தப் பொருளில் வழங்குகின்றனவோ அந்தந்தப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.