பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







'கேணி' (கிணறு), 'பெற்றம்' (பசு) இவை போன்ற சொற்கள் தமிழ்மொழியில் வழங்கும் சொற்கள். ஆனால், இவை தமிழ்ச் சொற்கள் அல்ல. இவ்வாறு, செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், தாம் குறித்த பொருளை விளக்கி நிற்கும் சொற்கள் திசைச்சொல் எனப்படும்

திசைச்சொற்கள்

1. தென்பாண்டி நாடு

பெற்றம் (பசு); சொன்றி (சோறு)

2. குட்ட நாடு

தள்ளை

(தாய்)

3.

குட நாடு

அச்சன்

(தந்தை)

4. கற்கா நாடு

கையர்

(வஞ்சர்)

5. வேணாடு

கிழார்

(தோட்டம்)

6.பூழி நாடு

பாழி

(சிறுகுளம்);

ஞமலி

(நாய்)

7. பன்றி நாடு

செய்

(வயல்)

8.

அருவா நாடு

கேணி

(சிறுகுளம்)

9. அருவாவடதலைநாடு

எகின்

(புளி)

10. சீதநாடு

எலுவன்

(தோழன்);

இகுளை

(தோழி)

11. மலாடு

12. புனல்நாடு

இகுளை

(தோழி)

ஆய்

(தாய் )

2.5.1.4 வடசொல்

'கமலம்', 'பாவம்', 'புண்ணியம்', 'புஷ்பம்' முதலான சொற்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் வந்து வழங்குகின்றன. இவை போன்ற சொற்கள் வடசொற்கள் எனப்படும்.

எ.கா:

கமலம்

தாமரை

விஷம் (அ) விடம் - நஞ்சு

புஷ்பம் (அ) புட்பம் – மலர்

அர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்

சுதந்திரம் – விடுதலை

விவாகம் – திருமணம்