42
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
முருகன் + ஐ = முருகனை
- (இரண்டாம் வேற்றுமை)
முருகன் + ஒடு = முருகனொடு
- (மூன்றாம் வேற்றுமை)
முருகன் + கு
=
முருகனுக்கு
- (நான்காம் வேற்றுமை)
முருகன், கல், மரம், முதலிய பெயர்ச்சொற்கள் காலத்தைக் காட்டவில்லை.
பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.
1.
பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. பண்புப்பெயர்
6. தொழிற்பெயர்
எ.கா:
1. பொருட்பெயர்
பசு, புத்தகம், இறைவன், மனிதன்.
2. இடப்பெயர்
தஞ்சாவூர், தமிழகம், வானம், நிலம்.
3. காலப்பெயர்
மணி, ஆண்டு, நாள், மாதம், நாழிகை.
4. சினைப்பெயர்
கண், காது, கை, தலை, கிளை, பூ.
5. பண்புப்பெயர்
இனிமை, நீலம், சதுரம், வட்டம், ஏழு.
6. தொழிற்பெயர்
படித்தல், உண்ணுதல், உறங்குதல், நடை, ஆடல்.
இளங்கோவடிகள் சிறந்த புலவர்.
யானை காட்டில் வாழ்கிறது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.
இத்தொடர்களிலுள்ள, இளங்கோவடிகள், யானை, மரம் ஆகிய சொற்கள் பெயர்களைக் குறிக்கின்றன. இவ்வாறு பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் - Noun எனப்படும். இத்தகைய பெயர்ச்சொற்களைப் பொதுநிலையில் இடுகுறிப் பெயர், காரணப்பெயர் எனப் பிரித்து
வகைப்படுத்துவர்.