தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
43
இடுகுறிப் பெயர்
'கல்', 'மண்' ஆகிய சொற்கள் எவற்றை உணர்த்துகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால், அப்பெயர்கள் ஏற்படக் காரணம் என்ன என்பது தெரியாது. காரணம் எதுவும் இல்லாமல் நம் முன்னோர் வழங்கியவாறே நாமும் வழங்கி வருகிறோம். இவ்வாறு, காரணம் கருதாமல், இப்பொருளுக்கு இந்தப் பெயர், எனத் தொன்றுதொட்டு இட்டு வழங்கி வரும் பெயர் 'இடுகுறிப்பெயர்' எனப்படும்.
காரணப் பெயர்
'நாற்காலி', 'முக்கண்ணன்', 'முக்கோணம்' இவை எவற்றை உணர்த்துகின்றன என்பதும், என்ன காரணத்தால் அப்பெயர் பெற்றன என்பதும் நமக்குத் தெரியும்.
நான்கு கால் உடைய காரணத்தால், நாற்காலி என்ற பெயரைப் பெற்றது; மூன்று கண் உடையவனாதலால் முக்கண்ணன் எனப்பட்டான். மூன்று கோணங்களை உடையதால் முக்கோணம் ஆயிற்று. இவையெல்லாம் காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் என்பதை அறியலாம். இவ்வாறு, காரணங்கருதி இட்டு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
ஆக்கப்பெயர்,
மேற்கண்ட பெயர் வகைகளோடு ஆகுபெயர், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் ஆகியவற்றையும் அறிந்துகொள்வோம்.
ஆகுபெயர்
பண்புப்பெயர்,
ஆகுபெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிக்கும். எனவே, ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றிற்கு ஆகி வருவதே ஆகுபெயராகும்.
குறிப்பு - ஆகுபெயர் அனைத்தும் பெயர்ச்சொற்களே. ஆனால், எல்லாப் பெயர்ச்சொற்களும் ஆகுபெயராகா.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுடன் சொல், தானி, கருவி, காரியம் வினைமுதல் என்னும் இவை முதலாக வரும் பெயர்களுள் ஒரு பொருளினது இயற்பெயரால் அதனோடு தொடர்புடைய பிறபொருளைத் தொன்றுதொட்டுக் கூறி வருபவை ஆகுபெயராகும்.
நெல் அறுத்தான் ஆகுபெயரானது.
உலகம் சிரித்தது.
என் பள்ளி வென்றது.
உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு