பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







இவற்றில் உலகம், பள்ளி என்னும் இடப்பெயர்கள் இடத்தை உணர்த்தாமல் முறையே உலகிலுள்ள மக்களையும் பள்ளியிலுள்ள மாணவர்களையும் உணர்த்துகின்றன. எனவே இவை ஆகுபெயர் எனப்பட்டன

வெற்றிலை நட்டான்

ன.

நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக

வெற்றிலை ஆகுபெயரானது.

ஆகுபெயர்கள் பதினாறு - வகை

1. பொருளாகு பெயர்

2. இடவாகு பெயர்

3. காலவாகு பெயர்

4. சினையாகு பெயர்

5. பண்பாகு பெயர்

6. தொழிலாகு பெயர்

7. எண்ணலளவையாகு பெயர்

8. எடுத்தலளவையாகு பெயர்

9. முகத்தலளவையாகு பெயர்

10. நீட்டலளவையாகு பெயர்

11. சொல்லாகு பெயர்

12. தானியாகுபெயர்

13. கருவியாகு பெயர்

14. காரியவாகு பெயர்

15. கருத்தாவாகு பெயர்

16. உவமையாகு பெயர்

1. பொருளாகுபெயர்

முதல்

பொருளின்

பெயர், அதனோடு தொடர்புடைய

தொடர்புடைய இன்னொரு (உறுப்பு)

பொருளுக்கு ஆகி வருதல்.

(எ.கா) மல்லிகை சூடினாள்.

இங்கு மல்லிகை கொடியைக் (முல்லை) குறிக்காமல் 'சூடுதல்' என்னும் வினையால் பூவைக் (சினையை) குறித்தது.

2. இடவாகு பெயர்

இடத்தின் பெயர் இடத்தோடு தொடர்புடைய இன்னொன்றிற்காக ஆகி வருவது.