பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

47






11. சொல்லாகு பெயர்


ஏதோ ஒன்றுக்காகச் சொல் கருவி ஆகி வருவது. சொல் என்னும் சொன்னவற்றிற்கும் பிறவற்றிற்கும் ஆகுபெயராக வருவதால்

பெயர் ஆகும்.

(எ.கா) இந்தப் பாட்டு என் சிந்தனையைத் தூண்டியது.

சொல்

அது சொல்லாகு

இங்கே பாட்டின் பொருள்தான் சிந்தனையைத் தூண்டியது. பொருளுக்காகப் பாட்டு

என்ற சொல் கருவி ஆகி வந்தது.

மேலும் - சொல் தவறாதே

சொல்லுக்குக் கட்டுப்படு

12. தானியாகு பெயர்

பாலை இறக்கு.

இதில் பாலின் பெயர், பாலைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி), அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர் ஆகும்.

13. கருவியாகு பெயர்

ஒரு கருவியின் பெயர் அக்கருவியால் ஆகும் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.

(எ.கா) நான் குறள் படித்தேன்.

யாழ் இனிது குழல் இனிது

புல்லாங்குழல் கேட்டு மகிழ்ந்தாள்

இவற்றில் குறள் என்பது குறள் வெண்பாவைக் குறிக்கும் சொல். ஆனால் இங்கே குறள் வெண்பாவால் ஆக்கப்பட்ட பாக்களைக் குறிக்கிறது.

யாழும் குழலும் புல்லாங்குழலும் கருவிப்பெயர்கள். அந்தக் கருவியில் தோன்றும் இசைக்குப் பெயராக வந்துள்ளன.

14. காரியவாகு பெயர்

ஒரு காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு (கருவிக்கு) ஆகி வந்தால் காரியவாகு பெயர் எனப்படும்.

(எ.கா) நான் அலங்காரம் கற்றேன்.