48
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பல நாள்கள் தேடி இன்றுதான் அகத்தியம் வாங்கினேன்.
இவற்றில் அலங்காரம் என்னும் சொல் அலங்காரத்தைக் (அணியை) கற்பிக்கும் நூலுக்கு ஆகி வந்துள்ளது. அதைப்போன்று அகத்தியம் என்னும் சொல் அகத்தியம் என்ற
நூலிற்கு ஆகிவந்துள்ளது.
15. கருத்தாவாகு பெயர்
ஒருவர் செய்த பொருளின் பெயர், செய்தவரின் பெயருக்கே ஆகிவருவது.
(எ.கா) வைரமுத்துவைப் படி.
இங்கு, வைரமுத்து எழுதிய கவிதைக்காக வைரமுத்து என்கின்ற கருத்தா ஆகி வருகிறது.
16. உவமையாகு பெயர்
ஓர் உவமைப்
உவமையாகுபெயர்.
பெயர், அதனால் உவமிக்கப்படுகின்ற பொருளுக்கு ஆகிவருவது,
(எ.கா) மயில் ஆடினாள்
மயில் ஆடினாள் - இதில் மயில் என்னும் உவமை மயில்போன்ற ஒரு பெண்ணுக்கு ஆகிவந்ததால் இது உவமையாகு பெயர்.
ஆக்கப்பெயர்
ஒரு சொல்லிலிருந்து உருவாக்கப்படும் பெயரை ஆக்கப்பெயர் என்கிறோம். இக்காலத்தில், ஆக்கப்பெயர் உருவாக்கம் இன்றியமையாததாக உள்ளது. சமூகப் பயன்பாட்டில் மொழியின் தேவை மிகும்போதெல்லாம், அங்கே ஆக்கப்பெயர்களின் தேவையும் மிகுதியாகிறது. 'தொழில்' என்னும் பெயர்ச்சொல்லுடன் 'ஆளி' என்னும் விகுதி சேர்ந்து, தொழிலாளி என மாறுகிறது. இதேபோன்று தேவைகளின் அடிப்படையில் காலந்தோறும் ஆக்கப்பெயர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆக்கப்பெயரைப் பெயரடி ஆக்கப்பெயர், வினையடி ஆக்கப்பெயர் இருவகையாகக் காணலாம்.
பெயரடி ஆக்கப்பெயர்
என
பெயர்ச்சொல்லுடன் பெயராக்க விகுதிகள் சேர்ந்து, பெயரடி ஆக்கப்பெயர் உருவாகிறது. பின்வரும் எடுத்துக்காட்டுகள் வாயிலாக இவற்றை அறிந்துகொள்ளலாம்.
ஆளி
ஆளன்
படைப்பாளி, உழைப்பாளி, முதலாளி, கொடையாளி, செலவாளி, அறிவாளி
எழுத்தாளன், பண்பாளன், நெசவாளன், ஆய்வாளன்