பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்

ணையக்

இணை

TAMIL

VIRTUAL

கல்விக்கழகம்

ACADEMY

தமிழ் இணையக் கல்விக்கழகம்

திரு. சே. ரா. காந்தி, இ.ர.பா.ப.,

இயக்குநர் (மு.கூ.பொ.)

(முந்தைய தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)

Tamil Virtual Academy

(Erstwhile Tamil Virtual University)

அணிந்துரை

உலகில் பல மொழிகள் தோன்றின. அவற்றுள் பல காலவெள்ளத்தில் அழிந்தன. புதிய புதிய மொழிகளும் தோன்றி வளர்ந்தன. அவ்வகையில் பல நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் இனிமை குறையாமல் கற்போர் நெஞ்சம் களிப்புறச் செய்யும் அருந்தமிழ்ச் சிறப்பினை எளிதாகச் சொல்லிவிட முடியாது. பழமைக்கும் பழமையாய் இலக்கண இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு மட்டுமல்லாமல், புதுமைக்கும் புதுமையாய்க் கருத்துச் செல்வம் நிறைந்ததாய், என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ்மொழி. இச்சிறப்பைப் பிற மொழிகளில் காண்பது (அரிது. காலம் காலமாக எழுந்த இலக்கண இலக்கியங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியைத் தொடர்ந்து பேணின. பின்பு வந்த புதுக் கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள், சிறுகதைகள் எனப் பலவகை இலக்கிய வடிவங்கள் தமிழில் தோன்றிப் பெருமை சேர்த்தன.

'சுவர் இருந்தால் அன்றோ சித்திரம் எழுத முடியும்?' தமிழ் இணையக் கல்விக்கழகம் இன்று சுவராக இருந்து தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பல சித்திரங்களை உருவாக்கிக் கொண்டு வருகிறது என்பது பெருமைக்குரியது. அவ்வகையில் குறுகிய காலத்தில் தமிழைப் பிழையின்றிப் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் தொல்காப்பியம், நன்னூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துகளின் வகைதொகை, பிறப்பு, ஒலிப்பு முறையுடன் அறிமுகம் செய்தல், சொல்வகைகளான மூவகைமொழி, இலக்கியவகைச் சொற்கள், இலக்கணவகைச் சொற்கள் ஆகியவற்றைப் பயன்பாட்டு அடிப்படையில் விவரித்தல், தொடர் அமைப்பு, தொடர் அமைப்பின் சிறப்பு, கருத்துவகைத் தொடர்கள், வழு, வழாநிலை, வழுவமைதி தொடர்பான விளக்கங்களை இதழ்கள், செய்தித்தாள்கள் துணையுடன் கற்றல், சொற்புணர்ச்சிகள், தனிச்சொல், துணைவினை, மொழிநடை, சொற்பிரிப்பு சேர்க்கை முறைகள், அமைப்பு முறை, பிறமொழிப் பயன்பாடு, நிறுத்தக் குறியீட்டுப் பயன்பாடு ஆகியவற்றை அறிமுகம் செய்தல் எனப் படிப்படியாகத் தமிழின் வளர்நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இலக்கணத்தை நூற்பாக்களின்வழி மனனம் செய்து கற்க வேண்டிய சூழலை மாற்றி, அன்றாட நடைமுறைப் பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கொண்டு கற்கும் நிலையை இந்நூல்* உருவாக்கியுள்ளது என்பது பாராட்டிற்குரியது. இந்நூலை அழகுற வடிவமைத்த அனைவருக்கும் என் பாராட்டுகள். தமிழைப் பிழையின்றி கற்கவும், எழுதவும், பேசவும் முயலும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

மாணவர்கள்

தேவசந்தி

இயக்குநர்

Anna University Campus, Gandhi Mandapam Road,Kottur, Chennai - 600 025. Tel: 91-44-2220 9400, Fax: 91-44-2220 9405, E-mail: tva@tn.gov.in, URL:www.tamilvu.org