பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






ச்சி


சல்

ச்சல்

ப்பு

க்கை

க்காடு

உணர்ச்சி, தாழ்ச்சி, வீழ்ச்சி, தளர்ச்சி, எழுச்சி

உடைசல், விரிசல், கிழிசல்

விளைச்சல், காய்ச்சல், பாய்ச்சல், துணிச்சல், எரிச்சல்

உழைப்பு, சிரிப்பு, காய்ப்பு, மலைப்பு, விடுப்பு, எடுப்பு, தொடுப்பு, அறிவிப்பு

வாழ்க்கை, வழுக்கை, படுக்கை, அறிக்கை

விழுக்காடு, நோக்காடு, பூக்காடு

பெயரடி ஆக்கப்பெயர்களும் வினையடி ஆக்கப்பெயர்களும் வேற்றுமை உருபேற்றல் முதலான எல்லா இலக்கணங்களையும் பெற்று வரும்.

பண்புப்பெயர்

ஒரு பொருளில் காணப்படும் நிறம், பண்பு ஆகியவற்றைக் குறிப்பது, பண்புப்பெயர். பண்புப் பெயருக்கெனச் சில விகுதிகள் உள்ளன.

மை

வெண்மை, கருமை, செம்மை, மென்மை

தொல்லை

சி

மாட்சி

பு

கறுப்பு

மழவு