பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

53






இது மூவகைப்படும்.

1. இறந்தகாலம் – படித்தான், நடித்தான், சென்றாள், உறங்கினார்.

2. நிகழ்காலம் – படிக்கின்றார், நடிக்கிறார், செல்கின்றாள், உறங்குகிறார்.

3. எதிர்காலம் – படிப்பான், நடிப்பான், செல்வாள், உறங்குவாள்.


முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

முற்று

ஒரு தொழிலைக் குறித்து வந்து முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். அது திணை, பால், எண், இடம், காலம் காட்டும். பயனிலையாக வரும். வேற்றுமை உருபு ஏற்காது.

எ.கா. அவள் பாடினாள், இதில் பாடினாள் என்பது இறந்தகாலம், திணை உயர்திணை, பால் பெண்பால், எண் ஒருமை, இடம் - படர்க்கை.

தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று என வினைமுற்று பலவகைப்படும்.

1. தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றை உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

எ.கா: 1: செல்வி மாலை தொடுத்தாள்

1. செய்பவள் - செல்வி

2. கருவி - பூ, நார் முதலியன

3. நிலம் - வீடு அல்லது கடை

4. செயல் – தொடுத்தல் ( பூ கட்டுதல்)

5. காலம் - இறந்தகாலம்

6. செய்பொருள்

மாலை

இவ்வாறு ஒரு வினைமுற்று திணை, பால், காலம், முதலியவற்றோடு செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறனையும் வெளிப்படையாகத் தெரிவிப்பது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

எ.கா: 2: இனியன் உணவு சமைத்தான். இந்தத் தொடரில் சமைத்தான் – என்னும் சொல் தெரிநிலை வினைமுற்று ஆகும்.