பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

57







இவ்வாறு, பெயரையும் வினையையும் இடமாகக் கொண்டு வரும் சொல் இடைச்சொல் Conjunctions or Particles எனப்படும். இடைச் சொற்கள் பல இருக்கின்றன. அவற்றுள் எட்டு வகையான இடைச்சொற்களைப் பார்ப்போம்.

1. வேற்றுமை உருபுகள்

பெயர்ச்சொற்களில் இறுதியில் பொருள் வேறுபாட்டிற்காக வரும் வேற்றுமை உருபுகள் இடைச்சொற்கள் தன்மையை உடையன. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைக்கும் உருபுகள் உண்டு. அவை,

இரண்டாம் வேற்றுமை

மூன்றாம் வேற்றுமை

ஆல்

நான்காம் வேற்றுமை

கு

ஐந்தாம் வேற்றுமை

இன்

ஆறாம் வேற்றுமை

அது

கண்

ஏழாம் வேற்றுமை

2. காலம் காட்டும் இடைநிலைகளும் விகுதிகளும்.

வினைச் சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச் சொற்கள் ஆகும். கிறு, கின்று, ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள். அன், ஆன் முதலியவை விகுதிகள்.

எ. கா - கொடுத்தான் - கொடு +த்+ஆன்

த் - இறந்தகாலம் காட்டியது. ஆன் - திணை, பால், எண், இடம் காட்டியது.

3. உவம உருபுகள்

இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமை காட்ட உதவுவன. போல, அன்ன, அனைய, ஒப்ப, புரைய என்பன உவம உருபுகள் ஆகும்.

உவமைத் தொடர்களில் உவம உருபுகள் வரும்.

எ.கா மலர் போல் அழகிய முகம்.

இதில் போல் என்பது உவம உருபு.

4. சாரியைகள்

சந்தி இலக்கணத்தில் வரும் சாரியைகள் இடைச்சொற்களாகும்.

எ.கா

ஆல்+அம்+கட்டி = ஆலங்கட்டி

என்பதில் அம் சாரியை இடையில் வந்துள்ளது.