பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






5. தத்தம் பொருளை உணர்த்தி வருபவை


ஏ, ஓ, உம் முதலிய இடைச்சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை.

எ . கா :

அவளே கொண்டாள்

அவளோ கொண்டாள்

அவளும் வந்தாள் - உம்

6. இசைநிறை

ஏ, ஒடு, ஓ, மார், ஆன முதலிய இடைச்சொற்கள் செய்யுளில் பொருள் இன்றி இசைநிறைவு செய்ய வருவன. இவை இசைநிறை சொற்கள் ஆகும்.

எ . கா :

ஏஏ இவள் ஓர் அழகியே

இவனொடு - ஒடு

கொல்லோ – ஓ

செல்லுமார் – மார்

வயினான ஆன

7. அசைநிலை

மன், மற்று, கொல் ஆகிய இடைச்சொற்கள் செய்யுளில் பொருள் இன்றி அசையாகவும் பயன்படுகின்றன.

எ.கா:

உடையேன்மன்

மன்

இதுவும்மற்று - மற்று

புலிகொல் யானை – கொல்

8. குறிப்பால் பொருள் உணர்த்துபவை

'கலகலவென', 'நிலமென' இவற்றில் வரும் 'என' என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும். மேலே காட்டியவாறு இடைச்சொல் எட்டு வகையாக வரும்.